Friday, January 30, 2015

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு :சட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்கிறது

தாழ்த்தப்பட்டோருக்கான, 18 சதவீத இட
ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு, 3 சதவீதம்
உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச
நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்

எம்.ஏ.,-எம்.எட்.,முடித்த
ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க
ஊதியம் வழங்க வேண்டும் என்ற
உத்தரவை நிறைவேற்றாததால்
அவமதிப்பு வழக்கில் பள்ளிக்
கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ்
அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச்
உத்தரவிட்டது.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நாளை 30/ 01/2015 எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு

கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு

கர்நாடகத்தில் ஆசிரியர்
பணிக்கு பொது நுழைவுத்
தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில
கல்வித் துறை அமைச்சர்
கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

'பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம்

பொதுத்தேர்வுகளில்
முறைகேடுகளை தவிர்க்கும்
விதத்தில், 'பிட்' அடிக்கும்
மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு
தடையும்,

B.Ed. & M.Ed. படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால
வரம்பை, இரண்டு ஆண்டுகளாக
உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ' தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு:அரசு தேர்வு துறை அறிவிப்பு

'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க
தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம்
தேதி வரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ்
விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்
துறை அறிவித்து உள்ளது.

Thursday, January 29, 2015

இளையோர் - மூத்தோர் ஊதிய விகிதம் - வழங்குதல் குறித்து RTI கடிதம்.

Question Paper - 10th Maths ( Tamil & English Medium)

Question Paper - 12th Maths(Tamil Medium)

12th Chemistry Study Material (English Medium) and Question Paper

EMIS ID கேட்டு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் வேட்டையைத் துவங்கி உள்ளனர்.


பொதுவாக, 14 வயது வரையிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால், தடையை மீறியும் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், 2001ல், 4.19 லட்சம் குழந்தை தொழிலாளர் இருந்தனர். அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், 29,656 பேராக குறைந்து விட்டது என தமிழக அரசு கூறி வருகிறது.

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப்ரீம் கோர்ட் கண்டிப்பு

பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

Wednesday, January 28, 2015

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு

'கருத்தியல் தேர்வுகளுக்கான
உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால்,
ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல்
தேர்வுகளை புறக்கணிப்பது' என,
திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் கலக்கும் " பேப்பர் டிரான்ஸ்பர்" அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கு அல்லாமல்
அவர்களின்ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 10- ந்தேதிக்குள் ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்க சி.டி.க்கள்!

மாணவர்கள்
ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க
தேவையான சி.டி.க்கள், கையேடுகள்
அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில்
பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வருமான வரி - 2014-15ம் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் சார்பான நிதித்துறையின் வழிக்காட்டு நெறிமுறைகள்

Tuesday, January 27, 2015

போராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக
அரசின் எதிர் மனுவால்
அதிருப்தி அடைந்த,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்,
போராட்டம் நடத்த
முடிவெடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழக முன்னாள் பொதுச்
செயலர் விஜயகுமார்,
முதுகலை ஆசிரியர் மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க ஊதிய
விகித முரண்பாடு குறித்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், டிச.,
18ல், தமிழக பள்ளிக்கல்வித்துறை எதிர்
மனு தாக்கல் செய்தது. அதில், ’கடந்த
ஊதியக் குழுவில்,
முதுநிலை பட்டதாரி -
பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊதிய
குழு பரிந்துரைப்படி, மத்திய
அரசு ஊழியருக்கு இணையான
ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,
கல்வித்துறையின், 1969 அரசாணையின்
படி, உயர்கல்வி ஊக்க ஊதியத்தால்
ஏற்பட்டுள்ள வேறுபாட்டை களைய
இயலாது’ என,
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள
அறிக்கை: ஒரே கல்வித் தகுதியில்,
ஒரே நாளில் பணியில் சேர்ந்த
பட்டதாரி ஆசிரியர்கள்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை
விட அதிகமாக ஊதியம் பெறும்
வேறு பாட்டை களைய,
வழக்கு தொடரப்பட்டது. ஆனால்,
கல்வித்துறை தாக்கல் செய்த,
எதிர்மனுவில் கூறப்பட்டுள்ள முரணான
கருத்துக்களை எதிர்த்து, நீதிமன்றம்
மூலம், தொடர் நடவடிக்கை எடுப்பது என
முடிவெடுத்து உள்ளோம். அதே நேரம்,
அரசின் எதிர்மனுவால்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களிடம்
ஏற்பட்டுள்ள, கடும்
அதிருப்தி யை வெளிப்படுத்த,
கிருஷ்ணகிரியில் நடக்கும்
பொதுக்குழுவில், அடுத்த கட்ட
போராட்டம்
குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 2ஆண்டு தேர்வு எழுத தடை; ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம்
முதல் வாரத்தில் தொடங்குகிறது.
சென்னையில் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் தலைமையில் 10
பறக்கும் படையும், தென்சென்னை,
மத்திய சென்னை, கிழக்கு சென்னை,
வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர்
தலைமையில் 4 பறக்கும் படைகள்
அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர்
மற்றும் வருவாய் கோட்டாட்சியர்
தலைமையில் அமைக்கப்பட்டுள்ள
பறக்கும் படைகளும்
தேர்வு மையங்களை கண்காணிக்கும்
பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுக்காக, தேர்வு மைய
முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,
துறை அலுவலர்கள், வினாத்தாள்
கட்டுப்பாட்டாளர்கள்,
பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும்
அறை கண்காணிப்பாளர்கள் என சுமார்
2800 தலைமை ஆசிரியர்கள்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் இதர ஆசிரியர்கள்
தேர்வுப்பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள். பிளஸ் 2
தேர்வில் ஒழுங்கீன செயலில்
ஈடுபடுவோரை தடுக்க அரசுத்
தேர்வுகள் இயக்ககம் பல
அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இதன்படி, தேர்வு அறைக்குள்
துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ,
அச்சிடப்பட்ட
புத்தகத்தை வைத்திருந்தாலோ
ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத
தடை விதித்தும்,
துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல் மற்ற
மாணவர்களின்
விடைத்தாட்களை பார்த்து எழுதுதல்
போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும்
மாணவர்களை இரண்டு ஆண்டுகள்
தேர்வு எழுத தடை விதிக்கவும்
முடிவு செய்துள்ளது. ஹால்டிக்கெட்
மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில்
மாணவ மாணவியரின் போட்டோக்கள்
இடம் பெறுவதால் ஆள்மாறாட்டம் நடக்க
வாய்ப்பில்லை. அதனால் பிட்
அடிப்பது தொடர்பாக கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்வுத்
துறை முடிவு செய்துள்ளது.
தேர்வு அறைக்குள்
அறை கண்காணிப்பாளர்,
தேர்வெழுதும் மாணவ, மாணவியர்
கண்டிப்பாக செல்போன்
வைத்துக்கொள்ள
தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி வைத்திருந்தால் துறை அலுவலர்
கள் அல்லது போலீசார்
அவற்றை பறிமுதல்
செய்து மேல்தொடர்
நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர
தடை
தேர்வுப்பணியில் ஈடுபடும்
ஆசிரியர்களிடம்
தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு
முடிந்து வெளியில்
செல்லும்போதோ முறைகேடான
செயல்களில் நடந்துகொள்ளும்
மாணவர்கள், மற்ற மாணவர்களின்
விடைத்தாட்களை வாங்கி எழுதுவது
போன்ற முறைகேடான செயல்களில்
ஈடுபடும் மாணவர்களுக்கு நிரந்தரமாக
தேர்வு எழுத முடியாத
நிலை ஏற்படும். மேலும் அந்த
மாணவர்கள் மீது காவல்துறை மூலம்
நடவடிக்கை எடுக்கவும் தேர்வுத்
துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி!

பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத
வருகை பதிவு வைத்திருந்தால்,
அவர்களை, செய்முறை தேர்வில்
தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,
வரும் பிப்ரவரி முதல் வாரத்தில்
செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள்
நடந்து வருகிறது.
மார்ச்சில்...
பிளஸ் 2 மற்றும் 10 ம்
வகுப்பு மாணவருக்கான, 2014 - 15ம்
கல்வியாண்டு பொதுத்தேர்வு, வரும்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.
பொதுத்தேர்வு மாணவருக்கான
செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்)
நடத்தப்படும். பிளஸ் 2 மாணவருக்கு,
இயற்பியல், வேதியியல், உயிரியல்,
தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர்
சயின்ஸ், தொழிற்கல்வி பாடங்கள்
உள்ளிட்டவைக்கு செய்முறை தேர்வு
நடத்தப்படும். வரும் பிப்ரவரி முதல்
வாரத்தில்,
செய்முறை தேர்வை நடத்துவதற்கான
ஏற்பாடுகளை,
தேர்வுத்துறை செய்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வருக்கு, மொத்தமுள்ள 200
மதிப்பெண்ணில், 150 மதிப்பெண்
எழுத்து தேர்வாகவும், 50 மதிப்பெண்
செய்முறை தேர்வாகவும் இருக்கும்.
அதில், செய்முறை தேர்வில் மட்டும், 30
மதிப்பெண் புறமதிப்பீட்டுக்கும், 20
மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும்
பிரித்து, மொத்தம், 50 மதிப்பெண்கள்
வழங்கப்படும்.
அக மற்றும் புறமதிப்பீடு மதிப்பெண்
சேர்த்து, 50க்கு, 40 மதிப்பெண்
எடுத்தால்தான், செய்முறை தேர்வில்
தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படும்.
அவ்வாறு, 40 மதிப்பெண்
செய்முறை தேர்வில் பெறாத மாணவர்,
செய்முறையில்
தேர்ச்சி அடையாதவராகவே
கருதப்படுவார். அவர் எழுத்துத்தேர்வில்,
150க்கு 150 மதிப்பெண் பெற்றாலும்,
சம்பந்தப்பட்ட பாடத்தில்
தேர்ச்சி அடையாதவராகவே
அறிவிக்கப்படுவார்.
அதனால்,
செய்முறை தேர்வு என்பது முக்கியம்.
மேலும் 150 மதிப்பெண்ணுக்கான
எழுத்துத் தேர்வில், 30 மதிப்பெண்
எடுத்தாலே, செய்முறை தேர்வில்
எடுத்த, குறைந்தபட்ச 40 மதிப்பெண்
சேர்ந்து, மொத்தம் 70 மதிப்பெண்ணாக
கணக்கிடப்பட்டு,
தேர்ச்சியடைந்து விடலாம்.
செய்முறை தேர்வில், பெரும்பாலும்
மாணவரின் நன்னடத்தை, வருகைப்
பதிவு,
செய்முறை தேர்வு ஆகியவற்றை
அடிப்படையாக கொண்டு, மதிப்பெண்
வழங்கப்படுகிறது.
பெரும்பாலான அரசு மற்றும் தனியார்
பள்ளி கள், செய்முறை தேர்வில்
முழு மதிப்பெண் வழங்கி, பள்ளியின்
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க
தேவையான
நடவடிக்கையை மேற்கொள்கின்றன.
இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள்,
வருகைப்பதிவு மற்றும்
ஓரளவு செய்முறை தேர்வை
எதிர்கொண்டாலே, அவரை, பாஸ்
(தேர்ச்சி) செய்துவைக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரு மாதங்கள்...
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், 75
சதவீத வருகைப்பதிவை பூர்த்தி
செய்திருந்தால், செய்முறை தேர்வில்,
50க்கு, 40 மதிப்பெண் வழங்கி, பாஸ் மார்க்
போடப்படும். கடைசி இரண்டு மாதங்கள்,
முறையாக பள்ளிக்கு வந்து,
பயிற்சி தேர்வுகளை
எழுதியிருந்தாலும், மதிப்பெண்
வழங்கப்படும். இருந்தாலும்,
செய்முறைத்தேர்வில், மாணவர்
தனது பங்களிப்பை முறையாக
செய்திருக்க வேண்டும். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.

81 சதவீத மானவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Sunday, January 25, 2015

டி.இ.டி., சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட முடிவு

.சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால் அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர்.

பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு

வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன.

5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை

தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Saturday, January 24, 2015

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன

SSA - BRTE பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்க
வட்டார வள மையங்களில் பணியாற்றும்
பயிற்றுநர்களை எவ்விதமான
முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய
இடமாற்றம் செய்வதை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலையில் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு: மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள் அறிமுகம்

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2
விடைத்தாள்களில் பக்கங்களின்
எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது.

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

பிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு
மையங்களுக்கு விடைத்தாள்கள்
அனுப்பி வைக்கப்பட்டன

தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு 2014ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

Thursday, January 22, 2015

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்
பயிலும் அனைத்து மாணவர்களும்
ஆங்கிலத்தை பொனிடிக்
மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம்
எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம்
தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 21, 2015

Question Paper - 12th Computer Science (English Medium)

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்

பள்ளிக் கல்வித் துறையில்
உடற்கல்வி ஆசிரியர்கள்
பணி மூப்பு அடிப்படையில்
பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

12th Tamil Study Materials

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின்ஊதியத்தை
குறைக்கும் வகையில் 2009-ஆம்
ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து

Sunday, January 18, 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்க திட்டமிடல்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக
சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது . 

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

10-ஆம் வகுப்பு மாணவர்களின்
கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்
ஆய்வு நடத்தப்பட உள்ளது.

தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன்
அதிகரித்துள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Saturday, January 17, 2015

நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள்
தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Friday, January 16, 2015

அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி: கூடுதல் கல்வித்தகுதிக்கு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

உத்தரவு
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்
பணி நியமனத்துக்கு கூடுதல்
கல்வித்தகுதிக்காக மதிப்பெண்
வழங்குவதில் குளறுபடி இருப்பதாக
தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ் வினியோகம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ல் தொடங்க திட்டம்

பிளஸ் 2
செய்முறை தேர்வுகளுக்காக
சென்னையில் 300 மையங்கள்
அமைக்க தேர்வு துறை முடிவு
செய்துள்ளது.

PG TRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயம்!

நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின்
முடிவுகள் விரைவில் வெளியிடப்பட
நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்
நிலையில் இந்த ஆண்டு முதல்
தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின்
வினாத்தாள்களுமே கடினமாக
இருந்ததாலும் தேர்வெழுதிய
பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

பள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்:இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் மாணவர்கள் விவரம் சேகரிப்பு

'பள்ளிக்
குழந்தைகளுக்கு என்று தனியாக
ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின்
விவரங்களை சேகரிக்க வேண்டும்'
என, மாநில திட்ட இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.

Tuesday, January 13, 2015

தொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

TRB PGT EXAM 2015 | TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, CHEMISTRY, BOTANY, ZOOLOGY, HISTORY, ECONOMIC, EDUCATION ANSWER KEY

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

பள்ளிக் கூடங்களில் கணித அறை,
மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்ப்பு

தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம்
வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல்
அடைவுத்தேர்வு துவங்குகிறது.

பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் - துணைவேந்தர் பேட்டி

பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள்
ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக
உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய
பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும்
மாணவர் பட்டியலில், பெயர் திருத்தம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.

Monday, January 12, 2015

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் எனவும், TRB விடை குறிப்புகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கழிவறைகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க கூடாது என இயக்குநர் உத்தரவு

Friday, January 09, 2015

அரசாணை வெளியிட்டும் ஊதியம் இல்லை! : அல்லல்படும் பகுதிநேர ஆசிரியர்கள்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்க இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த, அரசாணை வெளியிட்டும், அதிகாரிகளின் மெத்தனத்தால், ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நாளை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் அனுமதி

நாளை நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Thursday, January 08, 2015

அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?

பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான
காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை, 2015 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 01.01.2015 அன்றைய நிலவரப்படி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது

பொங்கல் போனஸ்: மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் 2013-2014 ஆம் ஆண்டு அனுமதி ஆணைகள் வெளியீடு

பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல்

அரசுக் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.இ. 10-வது, 12- வது வகுப்பு தேர்வுகள் மார்ச் 2- ந்தேதி தொடங்குகிறது

சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வழிமுறைகள் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2
மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற
வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை தலைமை
ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி
இயக்குனர் ச.கண்ணப்பன்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Wednesday, January 07, 2015

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
இருந்து மட்டுமே பட்டியல் பெற்று,
பணியில் நியமிக்க வகை செய்யும்
பணி விதியை, சென்னை உயர்
நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மா.க.ஆ.ப.நி - கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் சார்பான பணிமனை 07.01.2015 முதல் 09.01.2015 வரை சென்னையில் நடக்கிறது

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான
பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளியில் விண்ணப்பம் பெற இரவு முழுவதும் காத்திருந்த பெற்றோர்: அரசு உத்தரவு மீறப்படுவதாக புகார்

சென்னை அருகே கொளத்தூரில் தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக பெற் றோர்கள் இரவு முழுவதும் காத்தி ருந்தனர்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின்
எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அமலாகுமா? அரசு ஒப்புதல் அளிக்காததால் குழப்பம்!

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர்களிடம் ஏற்பட்டு உள்ளது.

Tuesday, January 06, 2015

அனைவருக்கும் கல்வி இயக்க தொடர் பயிற்சியால் திணறல்! ஈராசிரியர் பள்ளிகளில் கற்றல் பணி பாதிப்பு

அனைவருக்கும் கல்வி இயக்க தொடர்
பயிற்சியால், தொடக்க பள்ளிகளில் கற்றல்,
கற்பித்தல் பணியில்
பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் கடந்த 2000-
த்தில் ஒன்று முதல் எட்டாம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
கல்வி தரத்தினை மேம்படுத்த
தொடங்கப்பட்டது. செயல்வழி கற்றல் இதன்
மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு,
இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.
தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு
பள்ளி, மேலாண்மை குழு பயிற்சி,
ஆங்கில வாசிப்பு திறன்
மேம்பாட்டு பயிற்சி, அறிவியல்
செய்முறை பயிற்சி,
மாணவர்களை கையாளும் பயிற்சி உட்பட
பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த பயிற்சி முதல் பருவத்தில்
நடத்தப்படாமல், இரண்டாம் பருவ
கடைசி கால கட்டத்திலும், மூன்றாம்
பருவ கடைசி கால கட்டத்திலும்
நடத்தப்படுகிறது. இதனால், கற்றல்
கற்பித்தல் பணிகளில்
தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள்
புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம்
தேர்வு,அரையாண்டு
விடுமுறைக்குரிய மாதம். ஆனால்,
கடந்த 6-ம் தேதி, 13-ம் தேதியில்
பயிற்சி வழங்கப்பட்டது. இந்த மாதம் ஜன.3-
ம் தேதி குழந்தை உரிமைகள் குறித்த
பயிற்சி வழங்கப்பட்டது. வருகிற 5, 12, 19,27
ஆகிய தேதிகளில் பிரிட்டிஷ் கவுன்சில்
ஆங்கில பயிற்சி, 6-ம் தேதி அறிவியல்
பயிற்சி, 24-ம் தேதி குறுவளமைய கூட்ட
பயிற்சி நடக்கிறது. இந்த மாதம் 14 முதல்
17-ம் தேதி வரை பொங்கல்
விடுமுறையாகும். 26-ம்
தேதி குடியரசு தினமாகும்.
ஈராசிரியர் பள்ளியில் ஒரு ஆசிரியர்
பயிற்சிக்கு சென்றால், அடுத்த ஆசிரியர்
ஐந்து வகுப்புகளையும் கவனிக்க
வேண்டும். கற்றல்
பணியை முழுமையாக மேற்கொள்ள
இயலாது.தொடக்கபள்ளி ஆசிரியர்
ஒருவர் கூறும்போது: இந்த மாதம்
பொங்கல் லீவு, குடியரசு தின
லீவு வருகிறது. ஆண்டு தொடக்கத்தில்
இதை தவிர்க்கலாம். ஈராசியர் பள்ளியில்
உள்ள ஒரு ஆசிரியர்
பயிற்சிக்கு வருவதால் மற்ற
ஒரு ஆசிரியர்
அனைத்து வகுப்புகளையும் கவனிக்க
வேண்டும். இதனால்,
மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல்
பணிகளில் தொய்வு ஏற்படும். முதல்
பருவ கால கட்டமான ஜூன் மாதம் முதல்
செப்டம்பர் மாதத்துக்குள் இந்த
பயிற்சிகளை வழங்க வேண்டும்.
மூன்றாம் பருவம் குறுகிய காலம்
கொண்டது.
மாணவர்கள்
இறுதி தேர்வுக்கு தயாராவதால்,
அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர்
வழங்கும்
பயிற்சி மாணவர்களை முழுமையாக
சென்றடையாது. அனைவருக்கும்
கல்வி இயக்க நிதியை செலவழிக்க
வேண்டும் என்ற நோக்கில் திடீரென
பயிற்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
வருங்காலத்தில் இதனை தவிர்க்க
வேண்டும்.

கல்வித் தரத்தை அளவிட அடைவுத்தேர்வுகள் நடத்த அரசு உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் (எஸ்.எஸ்.ஏ.,),
2014-15ம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வித்
தரத்தை அளவிட, அடைவுத்தேர்வுகள் நடத்த
அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், எஸ்.எஸ்.ஏ., சார்பில் தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம்
மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல்
முறை குறித்து அளவீடு செய்வதற்கு அரசு, நகராட்சி,
நலத்துறை, உதவிபெறும் பள்ளிகளில் அடைவுத்தேர்வுகள்
நடத்தி வருகிறது.
இத்தேர்வின் முடிவுகளை கொண்டு, எதிர்வரும்
கல்வியாண்டுகளில் கற்பித்தல் முறையில் மாற்றங்கள்,
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகள்
உள்ளிட்டவைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு விரைவில்
நடக்கவுள்ளது. அடைவுத்தேர்வுகள் மூன்று,
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டாரத்துக்கு, 10 பள்ளிகள்
வீதம் தேர்வுசெய்து இத்தேர்வுகள் நடக்கும்.
கோவை மாவட்டத்தில், 22 வட்டாரங்களில், 220 பள்ளிகள்,
அடைவுத்தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 660 கண்காணிப்பாளர்களும், மாநில ஆசிரியர்
பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், 22 பேர்
மேற்பார்வையாளர்களாக நியமிக்கும் பணிகள்
நடந்துவருகிறது. அடைவுத்தேர்வுகள் தமிழ், ஆங்கிலம்,
கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய
பாடங்களுக்கு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகளின் முடிவுகள் மதிப்பீட்டு செய்யப்பட்டு,
பாடவாரியாக மாணவர்களின் தரம், வாசிப்பு திறன்,
அடிப்படை கணித கணக்கீடு உள்ளிட்ட அனைத்தும்
மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இத்தேர்வுகளுக்கு மாவட்டங்களில், செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகள், கண்காணிப்பாளர்கள்,
தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் விபரம்,
கேள்வித்தாள் வடிவமைப்பு பணி குறித்து நாளை மாலைக்குள்
சமர்ப்பிக்க கூடுதல்
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர்
தகுதி தேர்வில்
பங்கு பெற்று தேர்ச்சி
பெற்றவர்களின் சான்றிதழ்
ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டு, தேர்வர்கள்
பதிவு இறக்கம் செய்ய
அறிவுறுத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான
தேர்வர்கள் தங்கள்
சான்றிதழ்களை பதிவிறக்கம்
செய்து கொண்டனர். சரியான
முறையில் பதிவிறக்கம்
செய்யாதவர்களின் சான்றிதழ்கள்
தற்பொழுது Print out எடுக்கப்பட்டு,
தேர்வர்கள் தேர்வு எழுதிய
மாவட்டத்தின் அடிப்படையில்
தொடர்புடைய
அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர்கள் மூலம்
வழங்கப்பட உள்ளது.
தேர்வர்களுக்கு சான்றிதழ்
வழங்கும் பணியானது 19.01.2015 முதல்
14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது.

Sunday, January 04, 2015

மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய திட்டம்: ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசு துவக்கியது

பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும்
திறன் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகஇ - 2014-15 - அடைவுத்தேர்வு - நடத்துதல் - அடைவுத்தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்தல் சார்பான அறிவுரைகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் வழியில் அரசு ஊழியர்களும் தயார்:விரைவில் 'ஸ்டிரைக்' அறிவிப்பு? தமிழக அரசுக்கு அடுத்த சவால்!

ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம்
மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என,
முயற்சித்த அரசுத் துறை ஊழியர்
சங்கங்கள், விரைவில், வேலைநிறுத்த
போராட்ட அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளன.

Saturday, January 03, 2015

தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 4– ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இயக்குனரகம்

எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–
ந்தேதிக்கு முன்பாக மாணவர்
சேர்க்கை கூடாது என்றும்
அவ்வாறு மாணவர்களை சேர்த்தால்
பள்ளிகள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
மெட்ரிகுலேசன்
பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன்
பள்ளிகள் இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
மெட்ரிகுலேசன் பள்ளிகள்
தமிழ்நாட்டில் நர்சரி மெட்ரிகுலேசன்
பள்ளிகள், மெட்ரிகுலேசன்
உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளிகள் என்று ஏராளமான
பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும்
சுயநிதி பள்ளிகள் ஆகும்.
இவற்றில் நர்சரி பள்ளிகள் தவிர மற்ற
பள்ளிகள் அனைத்தும்
தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில்
உள்ளது. இந்த இயக்கத்தின் இயக்குனராக
பிச்சை இருக்கிறார்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் பல
ஜனவரி மாதத்திலேயே அடுத்த
கல்வி ஆண்டுக்கான மாணவர்
சேர்க்கையை தொடங்கி விடுகிறது.
குறிப்பாக எல்.கே.ஜி.
மாணவர்சேர்க்கை இப்போதே தொடங்கி
விடுகிறது.
இது தொடர்பாக
தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குனரகம்
அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின்
ஆய்வர்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்
கூறியிருப்பதாவது:–
ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக மாணவர்
சேர்க்கை கூடாது
தமிழ்நாட்டில் உள்ள எந்த மெட்ரிகுலேசன்
பள்ளிகளிலும்
இப்போது மாணவர்சேர்க்கை
நடைபெறக்கூடாது. ஏப்ரல் 4–
ந்தேதிக்கு பின்னர் தான் மாணவர்
சேர்க்கை நடைபெறவேண்டும்.
அதற்கான விண்ணப்ப படிவங்களும் அதன்
பின்னர்தான் வழங்கவேண்டும்.
முன்கூட்டியே எந்த பள்ளியும் மாணவர்
சேர்க்கைக்கான எந்த முகாந்திரமும்
தொடங்கக்கூடாது. அவ்வாறு எந்த
பள்ளியாவது மாணவர்
சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிகள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25% இடம் : கண்காணிக்க அரசு உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி,
தனியார் பள்ளிகள் ஏழைக்
குழந்தைகளுக்கு 25 சதவீத
இடங்களை ஒதுக்குவதைத் தீவிரமாகக்
கண்காணித்து செயல் படுத்த,
பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும்
மெட்ரிக்குலேஷன் கல்வித்
துறை இயக்குநர்களுக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும்
வசதியில்லாத குடும்பத் தினரின்
குழந்தைகள் படிக்க முடியாத சூழல்
உள்ளது.
தனியார் பள்ளிகளில் அளவுக்கு மீறிய
கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாததால்,
வசதியில்லா தவர்கள் கடன் வாங்கி, தங்கள்
குழந்தைகளை தனியார் பள்ளி களில்
படிக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கல்விக்
கூடங்களில் 25 சதவீத இடங்களை,
ஏழை மற்றும் வசதியில்லாத குடும்
பத்தைச் சேர்ந்த
குழந்தைகளுக்கு ஒதுக்க, மத்திய
அரசு கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தை கடந்த 2009ல் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் படி, தனியார்
பள்ளிக்கூடங்கள் 25 சதவீத இடங்
களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க
வேண்டும். அந்தக் குழந்தை களுக்கான
கல்விக்
கட்டணத்தை அரசே பள்ளிக்கூடங்களுக்கு
நேரடி யாக வழங்கும். இந்தச் சட்டம் கடந்த
ஆண்டுகளில் சரிவர
செயல்படுத்தப்படவில்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், கட்டாய மற்றும் இலவசக்
கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ தீவிரமாக
செயல்படுத்த, தனியார்
பள்ளிக்கூடங்களுக்கு
அறிவுறுத்துமாறு, பள்ளிக்கல்வித்
துறை அதிகாரிகளுக்கு தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்
துறை முதன்மை செயலர்
சபிதா பிறப்பித்த உத்தரவில், ‘‘கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தை தனியார்
பள்ளிகள் தீவிரமாக செயல்படுத்
துவது குறித்து, பள்ளிக்
கல்வித்துறை அதிகாரிகள்
கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இதற்காக பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர், தொடக்கக்
கல்வி இயக்குநர் மற்றும்
மெட்ரிக்கு லேஷன் பள்ளிகள் இயக்குநர்
ஆகியோருக்கு உரிய அதிகாரம்
அளிக்கப்படுகிறது. இவர்கள்
கண்காணிப்பு நடவடிக்கை
மேற்கொண்டு, கல்வி உரிமைச்
சட்டங்களை தனியார் பள்ளிகள் உரிய
முறையில்
செயல்படுத்துவது குறித்து,
அரசுக்கு அறிக்கை தர வேண்டும்’ என
கூறியுள்ளார்.