Thursday, October 17, 2013


இக்னோ: தொலைதூரக் கல்வி மையத்தில் சேர்க்கை!

தில்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
இளங்கலையில் பி.எஸ்சி.,(இயற்பியல், வேதியியல், வாழ்க்கை அறிவியல்), பி.காம், பிசிஏ, பி.எஸ்.டபிள்யூ, பீபிபி உள்ளிட்ட படிப்புகளும்,
முதுகலையில் எம்.ஏ, எம்.எஸ்சி, பிஜி டிப்ளமோ, எம்.எஸ்.டபிள்யூ, எம்சிஏ, எம்.எல்.ஐ.எஸ் ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதி:
இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் +2 முடித்திருக்க வேண்டும்.
முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள், இளங்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.ignou.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.150 வரைவோலை செலுத்த வேண்டும்.
டிசம்பர் 16 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment