Tuesday, October 08, 2013

சிஇஓ அலுவலகத்தில் பரபரப்பு: கோஷம் போட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்

தலைமை ஆசிரியர் மீது புகார் கூறி விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் கோஷமிட்ட அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே பனையபுரம் அரசுப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் பாலாஜி. நேற்று அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சிஇஓ அறைக்கு முன்பாக நின்று கொண்டு தமிழ் இலக்கியப்பாடல்களை பாடிக் கொண்டு கோஷமிட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் ஆசிரியர் பாலாஜி அங்கிருந்து நகராமல் சிஇஓ அறைக்கு முன்பாக சத்தம்போட்டு கோஷமிட்டார்.

முன்னதாக அவர் ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் இதுபோன்று கோஷங்களை எழுப்பியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஆசிரியர் பாலாஜியை நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து சிஇஓ மார்க்ஸ் உத்தரவிட்டார்.மார்க்ஸ் கூறுகையில், பாலாஜியின் பிரச்னை குறித்து ஏற்கெனவே புகார்கள் வந்தன. வருகைப்பதிவேட்டில் அவர் ஐஏஎஸ் என்று கையெழுத்திட்டு ள்ளார். தற்போது எங்கள் அலுவலகத்தில் வந்து சத்தம்போட் டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்து அவரது நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment