வங்ககடலில் உருவாகியுள்ள புயல் இன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது. காற்றும் மழையும் மேலும் தீவிரம் அடையலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர்,சென்னை,திருவள்ளூர், காஞ்சபுரம், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதுபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment