பெற்றோர் ஆசிரியர் கழகம் அச்சிட்டுள்ள பிளஸ் 2 வினா வங்கி மற்றும் தீர்வுப் புத்தகங்கள் வரும் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன.
பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வினா வங்கி&மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்களை அச்சிட்டு விலை மலிவாக விற்பனை செய்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வினா வங்கி&மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்களை அச்சிட்டு விலை மலிவாக விற்பனை செய்து வருகிறது.
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். மற்ற மாவட்டங்களிலுள்ள மாணவர்கள் சென்னைக்கு வந்தே புத் தகங்களை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கண்ட புத்தகம் கிடைக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. பிளஸ் 2 வினா வங்கி மற்றும் தீர்வுப் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
இவை ஒவ்வொன்றும் 25 முதல் 95 விலையில் கிடைக்கும். வரும் 20ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி அரசு மேனிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேனிலைப் பள்ளி, புரசைவாக்கம் ஈஎல்எம் பேர்ரியஸ் மேனிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்சிசி பள்ளி, சூளைமேடு ஜெயகோபால் கரோடியா மேனிலைப் பள்ளிகளில் கிடைக்கும். காஞ்சி மாவட்டத்தில் குரோம்பேட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்எம்ஜெயின் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் கிடைக்கும்.
No comments:
Post a Comment