திருச்சி: 2014ம் ஆண்டு ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி.,
பொதுத் தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் வரும் 29ம்
தேதி வரை விண்ணப்பிக்க புதிதாக மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி அரசுத் தேர்வுகள் மண்டல
துணை இயக்குனர் சுபத்ரா வெளியிட்டுள்ள
செய்திகுறிப்பு:வரும் 2014ம் ஆண்டு மார்ச்/ஏப்ரல்அமைக்கப்பட்டுள்ளது.
மாதங்களில் நடக்கவுள்ள ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வுகள் எழுத, தனித் தேர்வர்கள் நவம்பர் 18ம் தேதி முதல் வரும் 29ம்
தேதி வரை www.tndge.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த முறை நடந்த தேர்வின் போது தனித்தேர்வகள், தனியார் இணைய தள
மையங்களின் மூலம் விண்ணப்பித்ததில் பல குளறுபடி ஏற்பட்டதால், ஹால்டிக்கெட், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
பிரச்னைகளை தவிர்க்கும் வகையிலும், பிழையின்றி விண்ணப்பங்களை பதிவு செய்யவும், தேர்வுத் துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட
பணியாளர்களைக் கொண்டு ஒருங்கிணைப்பு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. மையங்களின் விபரம் இணைய தளத்தில் உள்ளன.
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மையங்களில் தேர்வர்கள் இணைய புகைப்படக் கருவி மூலம் ஃபோட்டோ எடுக்கப்படும்.
அதனால், தனித் தேர்வர்கள் இங்கு செல்லும் போது ஃபோட்டோ எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. மையங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து,
தேர்வு கட்டணத்தை அங்கேயே செலுத்தலாம். விண்ணப்பிக்கும் பணிகள் முழுவதும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வுக்கான கல்வித் தகுதி, வயது, தேர்வுக் கட்டணம், ஆகியவற்றை தீதீதீ.tணஞுஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த 3.6.13ம் தேதி முதல் 30.6.13ம் தேதி வரை மற்றும் 1.10.13 முதல் 15.10.13ம் தேதி வரையிலான தேதிகளில் அறிவியல் பாட
செய்முறை பயிற்சி வகுப்புக்கு பிறகு, பெயர் பதிவு செய்ய தவறியவர்கள், 18.11.13ம் தேதி முதல் 29.11.13ம் தேதி வரை, இணைய தள முகவரியில்
உள்ள அறிவுரைகளின் படி, செய்முறை வகுப்பு, தேர்வுக்கு பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment