Sunday, November 03, 2013

பொதுத் தேர்வு மைய அறையில் 20 பேருக்கு மேல் இருக்க கூடாது : தேர்வுத்துறை எச்சரிக்கை!


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுதேர்வில், அறை ஒன்றில் 
20 மாணவர்களுக்கு மேல் அமர வைப்பதை தவிர்க்க, 
கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த, சி.இ.ஓ.,க்களுக்கு 
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர், 
ரோல் நம்பர் உள்ளிட்ட விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்து, 
சி.இ.ஓ.,க்கள் மூலம், "சிடி'யாக தேர்வுத்துறைக்கு அனுப்பி வருகின்றனர். 
தேர்வு மையங்களில், ஒரு அறைக்கு 20 மாணவர்களை மட்டுமே தேர்வு 
எழுத அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக 
இருக்கும் பட்சத்தில், அருகில் உள்ள பள்ளிகளில், புதிதாக தேர்வு மையங்களை 
ஏற்படுத்தி, அதில், தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment