திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2
தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது.
எனவே இந்த ஆண்டு தேர்ச்சியை அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ஜெ.கே. அறக்கட்டளை எனும் தனியார் அமைப்புடன் மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்து, பின்தங்கியுள்ள 20 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கானதேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் தெரிவித்தாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பள்ளிகளில் 36 முதுநிலை ஆசிரியர்கள் மாதம் ரூ.6 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் நியமிக்கப்படுகின்றனர். அதற்காக இக்கல்வி ஆண்டு முடியும்வரை மாதந்தோறும் ரூ.2.16 லட்சத்தை அறக்கட்டளை வழங்கும்.
மேலும், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் என அடையாளம்
காணப்பட்டுள்ள 500 பேருக்கு சிற்றுண்டியுடன் கூடிய மாலை நேர வகுப்புகள் நடத்தவும், ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாக படிக்கும் 3 மாணவர்களை ஊக்கப்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.2.32 லட்சம் செலவிடவும், ரூ.5.69 லட்சம் மதிப்பில் பயிற்சி கையேடுகளையும் வழங்கவும் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment