10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும்
மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க,
தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த கல்வி ஆண்டில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட போது மாயமாகின.மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க,
தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து விசாரித்து, சிலர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த
சர்ச்சையை, வரும் ஆண்டுகளில் தவிர்க்க, தேர்வு மையத்தில் இருந்து, திருத்தப் படும் மையத்திற்கு, விடைத்தாள்களை கொண்டு செல்வது குறித்து,
தேர்வுத்துறை ஆலோசனை நடத்துகிறது. மொத்தமாக, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு வந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு,
வாகனங்களில் அனுப்பினால் எத்தனை ஊழியர்கள் தேவை; தபால்
நிலையத்தில் இருந்து, திருத்தப்படும் மையங்களுக்கு அனுப்பாமல், தலைமை தபால் நிலையங்களில் இருந்து அனுப்பினால் பாதுகாப்பாக இருக்குமா? என
ஆலோசிக்கப்படுகிறது; மேலும், கல்வி அதிகாரிகளிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment