இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இணையதள குற்றங்கள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
கருத்தரங்கிற்கு, இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் லேரி கிளிண்டன் தலைமை வகித்தார். கூட்டமைப்பு நிர்வாகி ராமமூர்த்தி, சிபிஐமுன்னாள் இயக்குனர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் லேரி கிளிண்டன் பேசியதாவது:
உலக அளவில் இணைய தள குற்றங்கள் பெருகி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு எடுத்த புள்ளி விபரங்களின் படி, ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும்,
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது. அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந்த நிலைமை இன்னும்
மோசமடைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில்
மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளது. விரும்பத்தகாத மெயில் (ஸ்பேம்) உருவாக்கி அனுப்புவதில் உலக அளவில்
இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நம் நாடுகளில் இணைய தள குற்றங்கள் ஏற்படும்போது, அதுகுறித்து ஆராய்ந்து அந்த குற்றத்துக்கான நடவடிக்கை எடுப்பதோடு நிறுத்தி கொள்ளும் போக்கு இன்னும் இருந்து வருகிறது. அதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இணையதள குற்றங்களை தடுக்க இந்தியாவில் 600 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் சீனாவில் 1.2 லட்சமும், அமெரிக்காவில் ஒரு லட்சம் நிபுணர்களும் உள்ளனர். விஐபிக்கள் மற்றும் முக்கிய இணைய தளங்களை முடக்கும் செயல்களை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் அதிக நிதிகளை ஒதுக்கியுள்ளது. தனிப்பட்டவர்களின்
இணைய தளங்களை பாதுகாக்க அதிக விலையிலான சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டும். குறைந்த முதலீட்டில் கிடைக்கும் சாப்ட்வேர்களை பயன்படுத்தினால் பிரச்னைதான் வரும். இணைய தள குற்றங்களை தடுக்க உலக அளவிலான எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை, இவ்வாறு லேரி கிளிண்டன் கூறினார்.
No comments:
Post a Comment