வாஷிங்டன்: இந்தியாவில், 60 கோடி மக்கள்,
கழிப்பறை வசதி இல்லாமல் வசிப்பதாக, உலக
வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,
ஒவ்வொரு ஆண்டும், நவ., 19ம் தேதி, "உலக
கழிப்பறை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள
அறிக்கையில், "உலகம் முழுவதும், 250
கோடி பேருக்கு, கழிப்பறை வசதி இல்லை.
இந்தியாவில் மட்டும், 60 கோடி பேர்,கழிப்பறை இல்லாமல் வசிக்கின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரமான, கழிப்பறை வசதி கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூரில், நேற்று நடந்த, உலக கழிப்பறை தின மாநாட்டில்,
அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் பூ பேசியதாவது: சுகாதாரமான
கழிப்பறை இல்லாததால் தான், பெரும்பாலான தொற்று நோய்கள் பரவுகின்றன. இதனால், மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கின்றன.
கழிப்பறை வசதி இல்லாததால், ஒவ்வொரு நாளும், உலக முழுவதும், 2,000 குழந்தைகள, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால் இறக்கின்றனர்.
போதுமான சுகாதாரம் இல்லாததால், வளரும் நாடுகளுக்கு, 16 லட்சம் கோடி ரூபாய், இழப்பு ஏற்படுகிறது, என்றார்.
No comments:
Post a Comment