இந்த ஆண்டின் டிசம்பர் மாதம், சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மாத இறுதி நாட்களான, 29, 30, 31 ஆகிய, மூன்று நாட்களும், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் வருகிறது.
அது போல், இந்த மாதத்தின், இந்த மூன்று கிழமைகளும், ஐந்து முறை வருகின்றன. இந்த அரிய அமைப்பு, 832 ஆண்டுகளுக்குப்பிறகு ஏற்பட்டு உள்ளது.சிறப்பானது இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ஞாயிறு, திங்கள்,செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இது போல், வழக்கமாக அமைவதில்லை. டிசம்பர் மாத காலண்டரை, பிற
மாத காலண்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த சிறப்பு தெரிய வரும். வல்லுனர்களின் கருத்துப்படி, டிசம்பர் மாதம், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது ஒரு அரிய நிகழ்ச்சியாகும்; இத்தகைய அரிய அமைப்பு, 823 ஆண்டுகளுக்கு முன், 1190ம் ஆண்டில் வந்துள்ளது. டிசம்பர் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றான, 8ம் தேதி, ஐந்து மாநில
சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன என்பது, இந்த நாளின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.நல்லதல்ல ஒரு மாதத்தின் இறுதி நாட்கள், ஐந்து முறை வருவது நல்லதல்ல என்று, ஜோதிட நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். மேலும், ஞாயிற்றுக் கிழமை ஐந்து முறை வருவது கோப
உணர்வுகளைத் தூண்டும்; திங்கள் கிழமை ஐந்து முறை வருவது நல்லது; செவ்வாய்க் கிழமை ஐந்து முறை வருவது செலவைத் தூண்டும் என்றும், ஒரு சில ஜோதிட அறிவியலில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment