அரசு பள்ளிகளில் 9-வது வகுப்பில் கற்றல் மற்றும் வாசித்தலில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் இணைப்பு பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பள்ளிக் கல்வி துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அனைவருக்கும்இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் 9-ஆவது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில்
இணைப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், குறிப்பிட்ட வகுப்பில் கற்றல், வாசித்தல், உச்சரிப்பு மற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெறும் பின்தங்கிய மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது.
இதையடுத்து, இவர்களுக்கு உச்சரித்தல், எழுத்துப் பயிற்சி மற்றும்
அடிப்படை பயிற்சியும் 3 மாதங்கள் வரையில் சிறப்பாக அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பிட்ட பாடங்களுக்குரிய சிறப்பாசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தலைமையில்
பள்ளி வளர்ச்சிக் குழு மேலாண்மையின் மூலம் நியமனம் செய்வதற்கு அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இவர்கள் பள்ளியில் குறிப்பிட்ட பாடவேளையிலும், மாலையிலும் 2 மணி நேரம் வரையில் வகுப்பறையில் பயிற்சி அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும்
ஒவ்வொரு பள்ளியிலும் 9-ஆம் வகுப்பில் இப்பயிற்சி அளிப்பதன் மூலம் 10-ஆம் வகுப்பு அரசு தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த முடியும் என்பதே நோக்கமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 175 அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இப்பயிற்சி வகுப்பு வருகிற நவம்பர் இறுதியில்
தொடங்கி, தொடர்ந்து பிப்ரவரி இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்காக பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு மூலம் சிறப்பாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதியமான் தெரிவித்தார்.

No comments:
Post a Comment