Friday, November 29, 2013

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., நுழைவு தேர்வு :ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., நிறுவனங்களில் சேர்வதற்கான
நுழைவுத்தேர்வுக்கு, ஆன்லைனில், டிசம்பர், 26ம் தேதி வரை, மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ( ஜே.இ.இ., ) எழுத வேண்டும். இந்த பிரதான தேர்வு, 2014, ஏப்ரல், 6ல் நடக்கிறது. பிரதான தேர்வில் வெற்றி பெற்றால்தான், 2014 ஆண்டு, மே, 25ல் நடக்கும், "ஜே.இ.இ., அட்வான்ஸ்' தேர்வில் பங்கேற்க முடியும். அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெற்றால் தான்,
நாடு முழுவதும் உள்ள, 16 ஐ.ஐ.டி.,களி"ல் சேர முடியும். பிரதான தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர், டிசம்பர், 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் அறிய,www.jeemain.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment