மார்ச் 2014-ல் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி, டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சலுகைகள் வழங்கப்படும் என புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுத கூடுதல் நேரம், மொழிப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு, சொல்வதை எழுதுபவர் நியமனம், கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி மற்றும் பிற சலுகைகள் கிடைக்கும். இச்சலுகைகள் பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் உரிய மருத்துவ சான்றுகளுடன் தங்கள் பயிலும் பள்ளி மூலம் டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரம் பெற தேர்வுப் பிரிவு, இணை இயக்குநர் அலுவலகம், பள்ளிக்கல்வி இயக்ககம், அண்ணா நகர் புதுச்சேரி என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்றார் வல்லவன்.
No comments:
Post a Comment