Thursday, November 14, 2013

மொகரம் காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த என்ஜினீயரிங், கலை அறிவியல் தேர்வுகள் தள்ளிவைப்பு

மொகரம் காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த என்ஜினீயரிங் தேர்வுகள், கலை அறிவியல் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
 தேர்வுகள் தள்ளி வைப்பு முகரம் வியாழக்கிழமைகடைபிடிக்கப்படுவதாக
இருந்தது. அதன் காரணமாக அண்ணாபல்கலைக்கழகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு செமஸ்டர்
தேர்வை நாளை நடத்த இருந்தது. அதுபோல சென்னை பல்கலைக்கழகமும்
கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு தேர்வுகளை நடத்த இருந்தது.தற்போது முகரம் வெள்ளிக்கிழமை என்று
அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே வெள்ளிக்கிழமை விடுமுறை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்
காரணமாக என்ஜினீயரிங் தேர்வுகள் அனைத்தும் 15– ந்தேதி நடைபெறாது என்றும் அந்த தேர்வுகள் அனைத்தும் 30–ந்தேதி நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தேர்வுகள் அதுபோல
வெள்ளிக்கிழமை நடக்கக்கூடிய எம்.பி.ஏ, எம்.சி.ஏ., எம்.எஸ்சி.(5 வருடம்) பி.எஸ்சி. படிக்கும் மாணவர்களுக்கு உரிய தேர்வுகள் அனைத்தும்
நாளை நடைபெறாது. அந்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பின்னர்
அறிவிக்கப்படும் என்று அண்ணாபல்கலைக்கழகம் இணையதளத்தில் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் இது போல சென்னை பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நாளை
தேர்வு நடத்த இருந்தது. அந்த தேர்வுகள்அனைத்தும் டிசம்பர் 11– ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment