Friday, December 20, 2013

பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்: கலெக்டர் தட்சிணாமூர்த்தி வேண்டுகோள்

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 
12 –ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் சுமார் 2200 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கான புத்தாக்க
பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த
புத்தாக்கப்பயிற்சியினை மாவட்ட கலெக்டர்
தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்து,
பேசியதாவது:–
நாமக்கல் மாவட்டத்தைப்
பொறுத்தவரை பல்வேறு துறைகளில்
சிறந்து வருகிறது. அதில் குறிப்பாக
முட்டை உற்பத்தி, கனரக வாகனங்கள்
கட்டமைப்பது, அதோடு கல்வித்துறையிலும்
பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.
கல்வித் துறையை பொறுத்தவரையில் தமிழக
மாணவ, மாணவிகள்
மட்டுமின்றி உலகெங்கிலுமிருந்தும்
மாணவ, மாணவிகள் நாமக்கல் மாவட்டத்தில்
உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில்
கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம்
காட்டிவருவது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக
உள்ளது. இந்த பெருமைக்கெல்லாம் காரணமாக
இருப்பவர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்.
இதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள
வேண்டும். கடந்த 2012 –ம் ஆண்டு நடைபெற்ற
பொதுத்தேர்வின்
தேர்ச்சி விழுக்காட்டினைவிட 2013 –ம்
ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 –ம்
வகுப்பு மற்றும் 12–ம்
வகுப்பு தேர்ச்சி விகிதத்தினை ஆசிரியர்களாகிய
நீங்கள் அதிகரித்துக் காட்டி உள்ளீர்கள்.
கடமைக்காக
பணி செய்வதை தவிர்த்து ஆசிரியர்களாகிய
நீங்கள் முழு அற்பணிப்புடன்
பணி செய்ததின் காரணமாக 2013 –ம் ஆண்டு,
நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 –ம் வகுப்பில்
113 அரசு பள்ளிகளும், 12 –ம் வகுப்பில் 36
அரசு பள்ளிகளும் 100 சதவீதம்
தேர்ச்சியினைப்பெற்று உள்ளது.
வரும் பொதுத்தேர்வில் இந்த
வெற்றியினை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
அனைத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள்
100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்களாகிய
நீங்கள் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கடந்த ஆண்டு 90சதவீதத்துக்கும்
குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள்
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ,
மாணவியர்களும் தேர்ச்சி பெற வேண்டும்
என்ற இலக்குடன் பணியாற்றிட வேண்டும்.
நன்கு படிக்கும் மாணவ,
மாணவியர்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமின்றி,
கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும்
மாணவ, மாணவியர்களை கண்டறிந்து,
அவர்களால் தேர்ச்சி பெற முடியும் என்ற
நம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்தி,
அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற
வைப்பது ஒரு ஆசிரியரின் தலையாய
பணியாகக் கொள்ள வேண்டும்.
மேலும் கல்வித்துறைக் காக பள்ளி மற்றும்
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக,
தமிழக முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட
உதவிகளை அறிவித்து,
செயல்படுத்தி வருகின்றார்கள்.
எனவே அனைத்து, அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களாகிய நீங்கள்
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நல்ல
கல்வி அறிவினைப்புகுத்தி நாமக்கல்
மாவட்டம் 100 தேர்ச்சி பெற்ற மாவட்டமாக
திகழ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர்
தட்சிணாமூர்த்தி பேசினார்.
இப்பயிலரங்கில் முதன்மைக்கல்வி அலுவலர்
குமார், பாவை கல்வி நிறுவனங்களின்
தாளாளர் மங்கை நடராஜன், தன்னம்பிக்கைப்
பயிற்சியாளர் ராமன், ஜெயலட்சுமி உட்பட
184 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 2,200–க்கும்
அதகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment