Wednesday, December 18, 2013

பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் 12 விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது

விளையாட்டு மேம்பாட்டுக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10
கோடி ஒதுக்கியதையொட்டி பள்ளிக்கூட மாணவர்களுக்கான 12 வகையான விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி  29-ந் தேதி வரை நடக்கிறது.
ஜெயலலிதா ரூ.10 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கூட மாணவர்களை விளையாட்டில்
ஊக்குவிப்பதற்காகமுதல்-அமைச்சர்
ஜெயலலிதா ரூ.10 கோடியை ஒதுக்கி உள்ளார்.
இதை யொட்டி பள்ளிக்கூட மாணவர்-
மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு
போட்டிகள் மாநில அளவில்
நடத்தப்படுகின்றன. தேசிய அளவிலான
போட்டிக்கும் அனுப்பப்படுகிறார்கள்.
தற்போது மாநில அளவில் 12 வகையான
விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 29-
ந்தேதி நடத்தப்படுகின்றன. அந்த போட்டிகள்
பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட
இருக்கின்றன.
விரைவு சைக்கிள் போட்டி, சிலம்பம்,
ஜூடோ ஆகிய போட்டிகள் இன்று தொடங்கி 20-
ந்தேதி வரை ராமநாதபுரத்தில்
நடைபெறுகிறது.
குத்துச்சண்டை, வாள்சண்டை (பென்சிங்) கேரம்
ஆகியபோட்டிகள் விழுப்புரத்தில் 27-
ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கின்றன.
ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ்,
டேக்வொண்டோ( கராத்தேபோன்ற விளையாட்டு)
ஆகியபோட்டிகள் 22-ந்தேதி முதல் 24-
ந்தேதி வரை சேலத்தில் நடைபெற இருக்கிறது.
டென்னிக்காய்ட், கடற்கரை வாலிபால், நீச்சல்
ஆகிய போட்டிகள் 29-ந்தேதி முதல் 31-
ந்தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெற
உள்ளது.
பரிசுகள்
இந்த மாநில அளவிலான போட்டிகளில் முதல்
இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.1,200 பரிசும், 2-
வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.800
பரிசும், 3-
வது இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.400
பரிசும் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும்
சில பரிசுகளும் கொடுக்கப்பட இருக்கின்றன.
இந்த
தகவலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment