Sunday, December 29, 2013

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது

வேலூரில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சம்
வாங்கிய, உடற்கல்வி ஆசிரியர்
கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம்,
பள்ளி கொண்டா அடுத்த, கேமராயன்
பேட்டையைச் சேர்ந்தவர், புவனா. இவர்,
குடியாத்தம், நெல்லூர் பேட்டை அரசினர் உயர்
நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக
வேலை பார்த்து வந்தார். இவரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளிக்கு,
இடமாறுதல் செய்து, உத்தரவிடப்பட்டது.
பள்ளிக்கு போய் வர சிரமம் ஏற்படுவதாக,
பல்லாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில்,
உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும்,
ஏரி குத்தியைச் சேர்ந்த, கலையரசன்
என்பவரிடம், புவனா கூறியுள்ளார்.
"தனக்கு கல்வித் துறையில் உயர்
அதிகாரிகளையும்,
கல்வித்துறை அமைச்சரையும் தெரியும்
எனவும், மூன்று லட்ச ரூபாய் இருந்தால் மட்டும்,
முன் பணியாற்றிய பள்ளிக்கே, இடமாறுதல்
வாங்கித் தருவதாகவும்' புவனாவிடம்,
உடற்கல்வி ஆசிரியர் கலையரசன்
தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த புவனா,
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய,
ஒரு லட்ச ரூபாய் பணத்தை,
உடற்கல்வி ஆசிரியர் கலையரசனிடம்,
புவனா கொடுத்தார்.மறைந்திருந்த
போலீசார்,கலையரசனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment