Saturday, December 07, 2013

பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன்லைனில் பதிவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, 2014 மார்ச், 3ல்
துவங்குகிறது. இந்தத் தேர்வை எழுதும்,
மாணவர்களின் பிறந்த தேதி, தமிழ், ஆங்கிலத்தில்
பெயர் எழுதும் முறை, பெற்றோர் பெயர், அங்க
அடையாளங்கள், உயரம், ரத்த வகை உட்பட, 20க்கும்
மேற்பட்ட விவரங்கள், பள்ளிகளில்
ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த விவரங்களை, மாணவர்களின் பாஸ்போர்ட்
சைஸ் வண்ண புகைப்படத்துடன், கம்ப்யூட்டரில்
பதியும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது.
மாணவர்கள் தங்கள் பெயரில், எழுத்து திருத்தம்
உட்பட, வேறு ஏதாவது மாற்றம் இருந்தால், அவற்றை,
வரும், 9ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளில்
திருத்தம் செய்து கொள்ளலாம்.
சரியான விவரங்கள் அடங்கிய பட்டியல், வரும்,
10ம் தேதி, ஆன் லைனில் ஏற்றப்படுகிறது.
இதற்கு பின், எவ்வித திருத்தமும் செய்ய இயலாது.

No comments:

Post a Comment