Sunday, December 22, 2013

விரைவுரையாளர் தகுதி தேர்வு:திருச்சியில் 29ம்தேதி நடக்கிறது - 10 மையங்கள்அறிவிப்பு

பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினரால் (யூஜிசி) இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.
இதற்காக திருச்சியில் 10 மையங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள
ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, நேஷனல்
கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம்
ஹோலி கிராஸ் கல்லூரி, திருவானைக்காவல் ஸ்ரீமத்
ஆண்ட வன் கலை மற்றும் அறிவியி யல் கல்லூரி,
திருச்சி தலைமை தபால் நிலையம்
அருகே ஆர்சி மேல்நிலைப்பள்ளி,
திருச்சி காவேரி மெட்ரிகுலேஷன்
மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலை நகர்
காவேரி மகளிர் கல்லூரி, அண்ணாமலை நகர்
தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன்
மேல்நிலைப்பள்ளி, பெரியார் ஈவெரா கல்லூரி,
ஜமால் முகமது கல்லூரி ஆகிய இடங்களில் பாடம்
வாரியாக தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தை தேர்வு மையமாக
தேர்வு செய்து விண்ணப்பித்துள்ள தேர்வர்கள்
தங்களது தேர்வு எழுதும்
மையத்தினை பல்கலை கழக இணையதளத்தில்
தெரிந்து கொள்ள லாம். தேர்வுக்கான
அனுமதிச்சீட்டு பல்கலைக்கழக
நிதிநல்கைக்குழு தேர்வு ஒருங்கிணைப்பாளரால்
வழங்கப்பட மாட்டாது.
பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டில்
தங்களது புகைப்படம் ஒட்டி அதில் கிரேடு 1
கெஸட்டடு ஆபீசர் சான்றொப்பம்
பெற்று தேர்வுக்கு எடுத்து வர வேண்டும்.
தேர்வுக்கான விதிமுறைகளை பல்கலைக்கழக
நிதிநல்கைக்குழு இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்
மேலும் விபரங்கள் தேவைப்படுவோர்
தேர்வு ஒருங்கிணப்பாளர் டேனியல்
தொலைபேசி எண் 0431-2407057, கைபேசி எண்
98944-37647 மற்றும் இணையதள முகவரியில்
தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment