Friday, December 06, 2013

குரூப்-2 தேர்வுக்கானவிடைகள் இணையதளத்தில்வெளியீடு!

குரூப் 2 முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள்
(கீ ஆன்சர்) வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி குரூப் 2 முதல்
நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு 114 நகரங்களில் 2 ஆயிரத்து 269
மையங்களில் நடந்தது. மொத்தம் 6 லட்சம் பேர் எழுதினார்கள்.
தேர்வு எழுதியவர்கள் தாங்கள் எழுதிய கேள்விகளுக்கான விடைகள் சரியாக
உள்ளதா? எத்தனை மதிப்பெண் கிடைக்கும்? என்பதை உறுதி செய்ய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை (கீ ஆன்சர்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளத்தில் www.tnpsc.gov.in
வெளியிட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு ஒரு வாரத்துக்குள்
தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு இறுதி விடை வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment