கடந்த 2011 செப்டம்பர் / அக்டோபரில் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்கள்
மதிப்பெண் சான்றிதழை பெற வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல
தேர்வுத்துறை துணை இயக்குனர்மதிப்பெண் சான்றிதழை பெற வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சுபத்ரா வெளியிட்ட அறிக்கை: "எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு 2011
செப்டம்பர் / அக்டோபர் தனித்தேர்வரின் மதிப்பெண் சான்றுகள், வினியோக
மையத்தில் தேர்வர் நேரில் பெறாமலும், அஞ்சலில் அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றுகள் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தேர்வு திட்ட விதிமுறைப்படி மதிப்பெண் சான்றுகள்
வினியோகிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுக்கு பின் அழிக்கப்படலாம் என்று உள்ளது. எனவே, 2011 தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு. இதை பயன்படுத்தி ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும்
விவரத்தை குறிப்பிட்டு தேர்வவெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு 40
ரூபாய்க்கான ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து, "மண்டல துணை இயக்குனர், அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகம், பழைய கலெக்டர் அலுவலக வளாகம், திருச்சி-01" என்ற முகவரிக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment