Monday, December 23, 2013

"கற்றலில் பின்தங்கியமாணவர்களை உளவியல்ரீதியாக அணுக வேண்டும்"

"ஆக்கப்பூர்வமான தலைமுறையை உருவாக்க வேண்டுமெனில் கற்றலில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து, உளவியல் ரீதியாக அணுகுவதே சிறந்த வழி" என, உளவியல் மருத்துவ நிபுணர் ரன்தீப் ராஜ்குமார் தெரிவித்தார்.
கோவை அரசு மகளிர் கல்வியியல்
கல்லூரியில் "குடிமைப்
பயிற்சி முகாம்" நடந்தது.
இரண்டாவது நாள் கருத்தரங்கில்,
உளவியல் மருத்துவ நிபுணர் ரன்தீப்
ராஜ்குமார் பேசியதாவது:
இன்றைய நவீனகால உலகில் அனைவரும்
இயந்திரம்போல் இயங்கிக்
கொண்டு இருக்கிறோம்.
பணத்தை மட்டும் குறிக்கோளாக
கொண்டு வாழ்கிறோம். இதில் அன்பு,
பாசம், பரிவு, பந்தம்
போன்றவற்றை மறந்து தனிமனிதனாக
சிந்தித்து வருகிறோம். இதனால்,
உளவியல் ரீதியான
பிரச்னைகளுக்கு ஆட்படுகிறோம்.
உலக சுகாதார நிறுவனம்
புள்ளி விவரப்படி ஐந்து பேரில்
ஒருவருக்கு மனநல ஆலோசகர்கள்
தேவைப்படுகின்றனர். 2020ம்
ஆண்டுக்குள் ஏறத்தாழ 20 சதவீத
மக்களுக்கு மனச்சோர்வு நிலை ஏற்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஒரே வழி, மனநல
விழிப்புணர்வை அனைவரிடமும்
ஏற்படுத்த வேண்டும்.
ஆக்கப்பூர்வமான
தலைமுறையை உருவாக்க
வேண்டுமெனில் கற்றலில் பின் தங்கிய
மாணவர்களை கண்டறிந்து, கல்வியால்
ஏற்படும் பிரச்னையை உளவியல்
ரீதியாக அணுகுவதே சிறந்த வழி."
இவ்வாறு, மருத்துவ நிபுணர் ரன்தீப்
ராஜ்குமார் பேசினார்.

No comments:

Post a Comment