Wednesday, December 04, 2013

எழுத்தறிவில்லாத சிறுமியருக்கு கம்ப்யூட்டர் வழங்க பீகார் திட்டம்

எழுத்தறிவில்லாத சிறுமியர், பெண்கள் கல்வி அறிவு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிய கம்ப்யூட்டர்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.
பீகார் மாநில, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ஷாகித் அலி கான் நிருபர்களிடம் கூறியதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களில், எழுத்தறிவில்லாத, பெண்கள், சிறுமியருக்கு, கல்வி அறிவை புகட்டும்
நோக்கில், அங்கன்வாடி மையம் மற்றும் வசுதா கேந்திரா போன்ற அமைப்புகள் மூலம், இரண்டு மாதம் பயற்சி அளிக்கப்படும். அதன் பின்,
அவர்களுக்கு, எளிதான தேர்வு நடத்தி, பயனாளிகள் தேர்ந்து எடுக்கப்படுவர்.
அவர்களுக்கு, சிறிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
.
இது தொடர்பாக, முதல்வர், நிதிஷ்குமாருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இதற்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அங்கன்வாடி மையம் என்பது, ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அறிவு வழங்குவது. வசுதா கேந்திரா, என்பது, பீகார் மாநிலத்தில் மட்டும் அமைக்கப்பட்ட, பொது சேவை மையம். இதன் மூலம், மக்களுக்கு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்று வழங்குதல்பொது சேவை மையம். இதன் மூலம், மக்களுக்கு, பிறப்பு,
இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்று வழங்குதல், இணையதள சேவை ஆகிய பணிகள் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment