பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள, காணொலிகளில்
அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ பிரதிபலிக்கும் வகையில்
இருக்கக் கூடாது,'' என்று, மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (எஸ்.சி.இ.ஆர்.டி., )
இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக, இ.எம்.ஐ.எஸ்., இணையதளத்தில்இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், பள்ளி, ஆசிரியர்கள் உட்பட
பலவிதமான தகவல்கள்
பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இந்த
இணையதளத்தில், முக்கிய பாடங்கள் சார்ந்த
காணொலிகள், நீதிக்கதைகள், செயல்முறை கல்வி,
பள்ளிக்கல்வித்துறை நிகழ்வுகள்
பதிவு செய்யப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்
சபிதா அறிவித்தார்.அதன்படி, முதல்கட்டமாக
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பத்தில்
கைதேர்ந்த மூன்று ஆசிரியர்களை தேர்வு செய்து,
காணொலிகள் தயாரிப்பதற்கான பயிற்சிகள் கடந்த
4ம் தேதி வழங்கப்பட்டது.காணொலிகள்,
கேட்பொலி, போன்ற தொழில்நுட்ப
கணினி வழி பதிவுகள் பிற இணையதளங்களில்
இருந்து எடுத்ததாக இருக்கக்கூடாது. புதியதாக
மட்டுமின்றி, ஆசிரியர்களின்
திறனை பிரதிபலிக்கும் வகையில் அமைய
வேண்டும். மேலும், காணொலிகள் 15 முதல் 20
நிமிடங்களுக்குள் பார்க்க கூடியதாக அமைத்தல்
வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் கண்ணப்பன்
கூறுகையில்,""காணொ லிகள் பதிவேற்றம் சார்ந்த
பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. முக்கிய
பாடங்கள், நீதி கருத்துகள் போன்றவை காணொலி,
கேட்போலி மூலம் தயாரித்து பதிவேற்றம்
செய்யப்படும். காணொலிகள் தனி மனிதனையோ,
தனிப்பட்ட நிறுவனம் அல்லது ஜாதி, மதம், இனம்
சார்ந்ததாகவோ இருத்தல் கூடாது.""எவ்வித அரசியல்
அமைப்பு தலைவர்களையோ,
சின்னங்களையோ குறிப்பிடுவதாகவும்,
தேவையற்ற, விரும்பத்தகாத காட்சிகள்,
திரை நடிகர்களை காட்டும் விதமாகவும் இருப்பின்
அவற்றை பதிவு செய்ய இயலாது. கல்வியியல்
மேலாண்மை தகவல் முறைமை குழுவின்
ஒப்புதலை பெறும் காணொலிகள்
மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம்,
ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல்
முறை எளிமையாக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment