Thursday, December 26, 2013

ஐ.ஏ.எஸ்., பதவிக்கு எழுத்துத்தேர்வு கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ்.,
நியமனம் பெற, அதிகாரிகள் கட்டாயம்
எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., மூலம் போட்டித் தேர்வில்
பங்கேற்று தேர்ச்சி பெறுவோர் நேரடியாக
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., பதவிகளில்
நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர,
மாநில அரசு பதவிகளில் துணை கலெக்டர்
(வருவாய்த்துறை) அந்தஸ்தில் உள்ள
அதிகாரிகளுக்கு, பணிமூப்பு, ஆண்டு ரகசிய
அறிக்கை அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,
மற்றும் ஐ.எப்.எஸ்., (வனத்துறை) பதவிகள்
அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான (2013)
நியமனம் முதல், மாநில அதிகாரிகளும்
எழுத்துத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்
என, மத்திய அரசின் பணியாளர் நிர்வாக
சீர்திருத்தத்துறை,
அனைத்து மாநிலங்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி இவர்கள் முதலில் எழுத்துத்
தேர்வை (300 மதிப்பெண்கள்) எழுத வேண்டும்.
இதில் முதல்தாள் கூர்மைத் தேர்வு (டெஸ்ட் ஆப்
ரீசனிங்), இரண்டாம் தாள் பொதுஅறிவு மற்றும்
மாநிலங்கள் பற்றியதாக இருக்கும்.
அடுத்து பணிமூப்புக்கு 250 மதிப்பெண்கள்
வழங்கப்படும். இதில் 8 ஆண்டுகளுக்கு மேல்
உள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் 10
மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜனவரி 1ல் 54
வயது பூர்த்தி அடைவது வரையுள்ள
ஆண்டுகள்தான் கணக்கிடப்படும்.
ஆண்டு ரகசிய அறிக்கைக்கு 250 மதிப்பெண்
வழங்கப்படும். இதில் பணியில் உள்ள
ஆண்டின் கடைசி 5 ஆண்டுகள் எடுத்துக்
கொள்ளப்பட்டு, ஒவ்வொரு ஆண்டுக்கும் 50
மதிப்பெண்கள் வரை வழங்கப்படும்.
அடுத்து நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில்
சம்பந்தப்பட்ட துறை, மாநிலங்கள், தேசியம்,
சர்வதேச பிரச்னைகள் குறித்து கேள்வி வரும்.
தலைமைப் பண்பு, சமயோசித அறிவும்
சோதனையிடப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள்
வழங்கப்படும். இத்தேர்வு முறையில்
வருவாய்த்துறை தவிர்த்து ஊரக
வளர்ச்சித்துறை, வணிகவரி, கல்வி, கருவூலம்,
மருத்துவம் போன்ற பிறதுறைகளில்
இருந்து வரும் அதிகாரிகள், பணிமூப்புக்குப்
பதிலாக, கட்டுரை வினாக்கள் கொண்ட
தேர்வை எழுத வேண்டும். இதற்கு 250
மதிப்பெண்கள் உண்டு.

No comments:

Post a Comment