தொடர்ந்து, 18 ஆண்டுகள் ஆங்கிலத்தில், நூறு சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த திருச்சி ஆசிரியருக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் புத்தங்களை வெளியிடும் பியர்சன் என்ற கல்வி நிறுவனம், ஆண்டுதோறும் இந்தியாவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து,
அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டு பியர்சன் நிறுவனத்தின் சார்பில், இந்தியா முழுவதும் இருந்து, 18 ஆசிரியர்களுக்கு, தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கானசர்வதேச அளவில் புத்தங்களை வெளியிடும் பியர்சன் என்ற கல்வி நிறுவனம், ஆண்டுதோறும் இந்தியாவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து,
அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
விருது வழங்கப்பட்டது. கடந்த, 13ம் தேதி டில்லியில் நடந்த விழாவில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் சிறந்த ஆசிரியர்களாக
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கினர். இந்த பெருமை மிக்க விருதை, தமிழகத்திலிருந்து இரு ஆசிரியர்களும், ஒரு பேராசிரியரும் பெற்றுள்ளனர். அவர்களில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சாய்ராம் என்பவரும் ஒருவர்.
மேற்கண்ட விருதுக்கு, ஆறாயிரம் விண்ணப்பம் செய்துள்ளனர். அதிலிருந்து, 72 பேர் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக, 18 பேரை, தேசிய அளவில்
கல்வியாளர்களைக் கொண்ட தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.
ஆசிரியரின் கல்வித்தகுதி, கற்பித்தலில் அவரின் சாதனை ஆகியவற்றை கணக்கில் கொண்டே இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி கி.ஆ.பெ., பள்ளி ஆங்கில ஆசிரியர் சாய்ராம், கடந்த, 18 ஆண்டாக, ஆங்கில பாடத்தில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்துள்ளார்.
இதுவே அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட முக்கிய காரணமாக இருந்துள்ளது. அத்தோடு ஆங்கிலம் கற்பித்தலில் பல எளிய, புதிய முறைகளையும் கையாண்டுள்ளது, ஆசிரியர் சாய்ராமுக்கு விருது கிடைக்க காரணமாக இருந்துள்ளது. தற்போது தேசிய அளவில் விருது பெற்றுள்ள, கி.ஆ.பெ., பள்ளி ஆங்கில ஆசிரியர் சாய்ராம், ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனத்தின் போல்ட் விருது, பாரதிதாசன் பல்கலையின் சிறந்த ஆசிரியர் விருது, மக்கள் சக்தி இயக்கத்தின் ஞானகுரு விருது உள்பட, ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். கடந்த, பத்தாண்டுகளில் சர்வதேச அளவில், 10 கட்டுரைகளையும் இவர் சமர்ப்பித்துள்ளார்.
தேசிய அளவில் விருது பெற்ற ஆசிரியர் சாய்ராமை, திருச்சி மாவட்ட
கல்வித்துறையினரும், கி.ஆ.பெ., விஸ்வநாதம் பள்ளி நிர்வாகத்தினரும்,
ஆசிரியர்களும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட விருதுக்கு, திருச்சியைச் சேர்ந்த சாய்ராமோடு, தேனி மாவட்டம்,
பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு பள்ளி ஆசிரியர் வெங்கடேஷ்குமார்,
இந்துஸ்தான் பல்கலை பேராசிரியர் சுடலைமுத்து ஆகியோரும்
தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment