Monday, December 23, 2013

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில்
காணலாம்.
 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்காக
ஜூலை 21இல் டி.ஆர்.பி.ஆல்
தேர்வு நடத்தப்பட்டது. இந்தத்தேர்விற்காக 1
லட்சத்து 67 ஆயிரத்து 688 பேர்
விண்ணப்பித்திருந்தனர். இதில்
தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59
ஆயிரத்து 748.
தமிழ் தவிர இதர பாடங்களுக்கான முடிவுகள்
07 அக்டோபர் 2013 அன்று வெளியானது.
இன்று (23.12.2013)தமிழ் பாடத்திற்கான
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை டி.ஆர்.பி.இன் http://
trb.tn.nic.in இணையதளத்தில் காணலாம்.
மேலும், சான்றிதழ்
சரிபார்ப்புக்கு ஓவ்வொருவருக்கும்
தனித்தனியாக கடிதங்கள்
அனுப்பப்படாது எனவும், இணையதளத்தில்
உள்ள தகவல்களை பார்த்து, அதன்
அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பில்
கலந்துகொள்ளலாம், என ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்க்கும் மையங்கள்
சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 30 மற்றும்
31ஆம் தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி,
விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய
இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சான்றிதழ்
சரிபார்க்கும் மையங்களில் நடைபெறும்.

No comments:

Post a Comment