Friday, December 13, 2013

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு நாளை கவுன்சிலிங்! பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு ( உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக செல்ல தகுதியானவர்களுக்கு மட்டும்)நாளை 14.12.2013 அன்று ஆன்லைன் மூலம் பணிமாறுதல் கவுன்சிலிங் அந்தந்த மாவட்டத்திலேயே நடைபெறும்,
இவர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பள்ளிக்கல்வி துறைக்கு மாறுதல் பெறுவர்.

மேலும், 1 முதல் 248 பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிமாறுதல் கலந்தாய்வும் நாளை நடைபெற உள்ளது.


முதுகலை ஆசிரியராக செல்ல வேண்டிய மேற்பார்வையாளர்களுக்கு கூடிய விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment