Saturday, December 21, 2013

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில் புதிய தேர்வு மையம்: தேர்வுத்துறைக்கு பரிந்துரை

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க,
தேர்வுத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மார்ச் 3 ல் பிளஸ் 2
வகுப்புகளுக்கும், மார்ச் 26 ல், 10 ம்
வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள்
துவங்க உள்ளன. இந்த ஆண்டு மாணவ,
மாணவியரின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், புதிய
தேர்வு மையங்கள் அமைக்க,
முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 10
ம் வகுப்பிற்கு 6 , பிளஸ் 2
வகுப்பிற்கு 3,புதிதாக தேர்வு மையங்கள்
அமைக்கும்படி, அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகள்,
தேர்வுத்துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
இந்த எண்ணிக்கை, ஒரு சில
மாவட்டங்களில் மாறுபடுகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறுகையில்,""முதன்மைக்கல்வி அதிகாரிகள்
மூலம், பரிந்துரைக்கப்பட்ட
தேர்வு மையத்தில், 20 வகுப்பறைகள்
உள்ளன. ஒரு அறைக்கு 20 மாணவர்கள்
வீதம், 400 பேர் தேர்வெழுதலாம். குடிநீர்,
மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட
அனைத்து அடிப்படை வசதிகளையும்
உள்ள மற்றும் எந்த சர்ச்சையிலும்
சிக்காத பள்ளிகளே, இதற்காக
பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஓரிரு வாரங்களில்,
தேர்வுத்துறை இறுதி முடிவு எடுக்கும்,''என்றார்.

No comments:

Post a Comment