கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நடைமுறையில்இருந்து வந்த 4 கல்வி வாரியத்தை கலைத்து விட்டு பொது
கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இந்த
முறை வரவேற்பு பெற்றது.
தமிழகத்தில் உள்ள 16
பல்கலைக்கழகங்களில்
வெவ்வேறு பாடத்திட்டங்கள்
தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனால் சில பட்டங்கள்
வேலைவாய்ப்புக்கு ஏற்றதல்ல
என்று நிராகரிக்கப்படுகிறது. சில பட்ட
படிப்புகள் இணையில்லை என்றும்
நிராகரிக்கப்படுகிறது.இதனால்
பல்கலைக்கழகங்களில் பட்டம்
பெறுபவர்கள் அதிகளவில்
பாதிக்கப்படுகின்றனர்.
இதை தொடர்ந்து ஒரே சமச்சீரான
கல்வியை நடைமுறைபடுத்த அரசு சார்பில்
ஆலோசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த
வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில்
அனைத்து பல்கலைக்கழக
துணை வேந்தர்கள் கூட்டம் நடந் தது.
அதில், கல்லூரிகளில் சமச்சீர்
கல்வி கொண்டுவருவது தொடர்பாக
ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான
துணை வேந்தர்கள்
ஆதரவு தெரிவித்துள்ளனர். சமச்சீர்
கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும்
பொதுமக்களின் கருத்து அறிய உயர்
கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
எனவே விரைவில் சமச்சீர்
கல்வியை கொண்டுவருவதற்கான
அறிவிப்பை அரசு வெளியிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment