எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான
தேர்வில் பங்கேற்க, டிச.,16ல் இருந்து 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வட்டார அளவில், பிப்.,22ம் தேதி,
தேர்வு நடக்கும். தமிழக அரசால்அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், நடப்பு ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், பெற்றோரின், ஆண்டு வருமானம், 1.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவர், ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பள்ளி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்
www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு கட்டணமாக, ரூ.50 28ம்
தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப விவரங்களை 23ம் தேதி முதல்
31ம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment