மத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்ததிட்டத்தின் கீழ், 9ம்
வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிப்பது, மாதிரிப்
பள்ளிகளை நிறுவுவது, மாணவியர்
விடுதிகள் கட்டுவது உள்ளிட்ட
பணிகள் நடக்கிறது.இதற்காக மத்திய
அரசு 75 சதவீத நிதியும், மாநில
அரசுகள் 25 சதவீத நிதியையும்
செலவிட வேண்டும்.
இதற்காக கடந்த ஆண்டு மத்திய
அரசு தனது பங்காக ரூ.510
கோடி வழங்கியது. அத்துடன் மாநில
அரசின் பங்கும்
இணைத்து மேற்கண்ட பணிகள்
தொடங்கப்பட்டன. மாணவியர்
தங்கி படிக்க வசதியாக 11 விடுதிகள்
ஜவ்வாது மலை, நீலகிரி மலை,
கொல்லிமலை உள்ளிட்ட மலைப்
பிரதேசங்களில் கட்டப்படுகின்றன.
விலை ஏற்றம் காரணமாக மாநில
அரசு கூடுத லாக ரூ.45 கோடியே 44
லட்சம் ஒதுக்கியுள்ளது.அதேபோல
தமிழகத்தில் 44 மாதிரிப் பள்ளிகள்
கட்டவும் திட்டமிடப்பட்டது. அதில்
இரண்டாம் கட்டமாக 26
மாதிரி பள்ளி கள் கட்டும் பணிகள்
கடந்த ஆண்டு தொடங்கியது.
விலை ஏற்றம் காரணமாக அந்த
பணிகள் நின்றன. இதனால்
இப்பணிகளுக்காக தமிழக
அரசு கூடுதலாக ரூ.57 கோடியே 23
லட்சம்
வழங்கியுள்ளது.இதையடுத்து,
ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வரும்
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 1851
கூடுதல் வகுப்பறைகள் கட்ட மாநில
அரசு கூடுதல் நிதியாக ரூ.71
கோடியே 18 லட்சம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment