தேர்வின்போது மாணவர்களோ,விடைத்தாள்
திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்
தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட
விடைத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்
தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட
விடைத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பிளஸ்-2 பொதுத் தேர்வு அடுத்த
ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம்
தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வு மார்ச் 26-ல் ஆரம்பித்து ஏப்ரல் 9-ம்
தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
12-ம் வகுப்புத் தேர்வை 8.5
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ -
மாணவிகளும், 10-ம்
வகுப்பு தேர்வை கிட்டதட்ட 11 லட்சம்
பேரும் எழுத இருக்கிறார்கள்.
2014-ல் நடத்தப்படும் பிளஸ்-2,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில்
அரசு தேர்வுத்துறை பல்வேறு புதிய
முறைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
மாணவர்களின் புகைப் படம், ரகசியக்
குறியீடு (பார்கோடு) ஆகியவற்றுடன்
ஒவ்வொரு மாணவ ருக்கும்
தனித்தனி விடைத்தாள்கள் வழக்கமான
பக்கங்களை விட அதிகரித்து வழங்கப்பட
இருக் கின்றன.
பக்கங்கள் அதிகரிப்பு
அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி.
மாணவர்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட
விடைத்தாள் ஒரே கட்டாகவும், பிளஸ்-2
மாணவர் களுக்கு 40 பக்கங்கள் கொண்ட
விடைத்தாள் ஒரே கட்டாகவும், உயி ரியல்
மாணவர்களுக்கு மட்டும் 52 (தாவரவியல்,
விலங்கியல் பாடங்களுக்கு தலா 26
பக்கங்கள்) பக் கங்கள் கொண்ட
ஒரே விடைத்தாள் கட்டாகவும்
கொடுக்கப்படும்.
முன்பு எஸ்.எஸ்.எல்.சி.
மாணவர்களுக்கு 8 பக்கங்கள் கொண்ட
விடைத்தாளாகவும், பிளஸ்-2
மாணவர்களுக்கு 16 பக்கங் கள் கொண்ட
விடைத்தாளாகவும்
வழங்கப்பட்டு வந்தது. மாணவர்கள்
தங்களுக்கு கூடுதல் விடைத்தாள்
தேவைப்பட்டால் தேர்வுப் பணியில்
இருக்கும் ஆசிரியரிடம்
வாங்கிக்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறை கூடுதல் தாள்
வாங்கும்போது பதிவு எண்,
தேர்வு பெயர், பக்கம் உள்ளிட்ட
விவரங்களை குறிப்பிட வேண்டும்.
நேரம் மிச்சம்
இதனால் அவர்களின் தேர்வு நேரம்
வீணாகும் நிலை இருந் தது. அதேபோல்,
ஒரே நேரத்தில் நான்கைந்து பேர்
எழுந்து விடைத்தாள்கள் கேட்டால்
ஆசிரி யர்களுக்கும் சிரமம்
ஏற்படுவதுடன் மாணவர்களுக்கும்
காலதாமதம் ஆகும்.
ஆனால், தற்போது 30 பக்கங் கள், 40
பக்கங்கள், 52 பக்கங்கள் கொண்ட பெரிய
விடைத்தாள் கட்டாக கொடுத்துவிடுவதால்
பெரும்பாலானோர் இந்த பக்கங் களுக்குள்
எழுதி முடித்துவிடுவர். கடந்த
ஐந்தாறு ஆண்டுகளாக பொதுத் தேர்வில்
மாணவர்கள் எழுதிய அதிகப்பட்ச
பக்கங்களை அடிப்படையாகக்
கொண்டு தேர்வுத்
துறை தற்போது விடைத்தாள்
பக்கங்களை நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்கோடு விடைத்தாள்
இதேபோல், ரகசிய குறியீட்டுடன் கூடிய
விடைத்தாள்கள் அறிமுகப்
படுத்தப்படுவதால்
தேர்வின்போது மாணவர்களோ,
விடைத்தாள்
திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வது முற்றிலுமாக
தடுக்கப்படும். ஏற்கெனவே எழுதிய
விடைத்தாள்களுடன் முறைகேடாக
புதிய விடைத்
தாள்களை சேர்த்து மதிப்பெண்
வழங்கப்படுவதாக
அவ்வப்போது புகார்கள் எழுப்பப்
பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பார்கோடு விடைத்தாள் முறையால்
இது போன்ற
புகாருக்கு வாய்ப்பே இல்லை.
விடைத்தாள்
மதிப்பீட்டின்போது ஒவ்வொரு விடைத்தாளுக்கும்
மாற்று எண் (டம்மி எண்) வழங்குவது,
பின்னர் மாற்று எண்
விடைத்தாளுக்கு வழங்கிய
மதிப்பெண்ணை அசல்
எண்ணுக்கு மாற்றம்
செய்து பதிவேட்டில் பதிவுசெய்வது,
மேலும், மதிப் பெண்
விவரங்களை அரசு தகவல்
தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்)
ஒவ்வொன்றாக பதிவது என
ஆசிரியர்களுக்கும்
தேர்வுத்துறை ஊழியர்களுக்கும்
ஏற்படும் வேலைப்பளு வெகுவாக
குறைந்துவிடும்.
விடைத்தாளின் முன்பக்கத்தில்
மேல்பகுதி, கீழ்பகுதி, மார்ஜின்
பகுதி என 3 இடங்களில் ரகசிய
குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும்.
எனவே, விடைத்தாள் திருத்தும்
ஆசிரியர்களுக்கு மாற்று எண் போடும்
வேலை இருக்காது. விடைத்தாள்கள்
திருத்தப் பட்டவுடன் மதிப்பெண்
விவரமும் ரகசிய குறியீடும்
ஆன்லைனில் உடனுக்குடன்
கணினியில்
பதிவுசெய்யப்பட்டுவிடும்.எல்லாவற்றுக்கும்
மேலாக வரும் ஆண்டு பிளஸ்-2,
எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள்
நேரடியாக குறிப்பிட்ட
மதிப்பீட்டு மையத்துக்கு அனுப்பப்படாமல்
மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு மொத்தமாக
கொண்டுசெல்லப்பட்டு பின்னர்
வேவ்வேறு மையங்களுக்கு அனுப்பப்பட
உள்ளது.
யாருக்கும் தெரியாது
பழைய முறையில், குறிப்பிட்ட
பள்ளியில் மாணவர்கள் எழுதிய
விடைத்தாள்கள் எந்த
மையத்துக்கு செல்கின்றன
என்பது அந்த பள்ளியின்
தலைமை ஆசிரியருக்கு தெரியும்.
இதற்காக விடைத்தாள் கட்டுகளை தபால்
அலுவலகத்தில்
பதிவுசெய்து அனுப்பாமல்
தேர்வுத்துறை அதிகாரிகளும், மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி மூலம்
நியமிக்கப்படும் காப்பாளரும்
(கஸ்டோடியன்) தனி வாகனத்தில்
ஒவ்வொரு மையத்துக்கு சென்று விடைத்தாள்களை சேகரித்து எடுத்துச்செல்ல
திட்ட மிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment