தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வுகளில்
முறைகேடுகளை தவிர்க்க
கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வுகளில்
முறைகேடுகளை தவிர்க்க
கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுதேர்வுகள் வருகிற
2014 மார்ச் 3-ம் தேதி தொடங்கி, மார்ச் 25-ம்
தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26-ல்
தொடங்கி, ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வரையும்
நடைபெறும் என கல்வித்துறை தேர்வு கால
அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில்
உள்ள
கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய
தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்,
பறக்கும்படை உறுப்பினர்கள் ஆகியோரை அந்தந்த
மாவட்டத்தில் உள்ள
கல்வித்துறை அதிகாரிகளே நியமனம்
செய்து வந்தனர். தற்போது இந்த
ஆண்டு தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும்
வகையில் முதன், முதலாக சென்னையில் உள்ள
தேர்வுத்துறை இயக்குனரே இந்த நியமனத்தை செய்ய
உள்ளனர்.
தேர்வின் போது தமிழகத்தில் சில பள்ளிகளில்
முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்
வருவதை முற்றிலுமாக தடுக்க
பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள
கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக
கூறப்படுகிறது. இதற்காக முதல் முறையாக
இதுவரை இருந்த சில நடைமுறைகளை மாற்றம்
செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு தேர்வு அறையிலும்
கண்டிப்பாக 20 மாணவர்கள்தான் தேர்வு எழுத வைக்க
வேண்டும். அதற்கு மேல் கூடுதல் எண்ணிக்கையில்
மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க கூடாது.
ஒரு மையத்தில் உதாரணத்திற்கு 250 மாணவர்கள்
தேர்வு எழுதுகிறார்கள் என்றால் 12 அறையில்
தலா 20 மாணவர்களையும், ஒரு அறையில் 10
மாணவர்களையும்தான் தேர்வு எழுத வைக்க
வேண்டும்.
இதே போல் தேர்வு அறையின் கண்காணிப்பாளர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவர். அதில் மூத்த ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள் போன்றோர்
பறக்கும்படைக்கு நியமிக்கப்படுவர். இந்த
நியமனம் அனைத்தும் அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட
கல்வி அதிகாரிகள் அளவில்
தேர்வு செய்து வந்தனர். ஆனால் வரும்
தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்கள்,
பறக்கும்படைக்கு யார் தேர்வு செய்யப்பட வேண்டும்
என்பதை சென்னையில் உள்ள கல்வித்துறை மற்றும்
தேர்வுத்துறை இயக்குனரின் நேரடி கண்காணிப்பில்
தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வுக்கு பயன்படுத்தக் கூடிய ஆசிரியர்கள்
பட்டியல் மட்டும் ஒவ்வொரு மாவட்டத்தில்
இருந்தும் தேர்வுத்துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட
வேண்டும். அதனடிப்படையில் தான்
தேர்வு பணியில் ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுகின்றனர். இதே போல் விடைத்தாள்
திருத்தும் பணிக்கு ஆசிரியர் தேர்வும்
சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குனர்
அளவில் தான் நடக்கிறது.
விடைத்தாள் திருத்துவோர் பட்டியல் இயக்குனர்
அலுவலகத்தில் இருந்து தான் வரும். அந்த
பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள்
அனைவரும் கண்டிப்பாக விடைத்தாள்
திருத்துவதற்கு சென்று ஆக வேண்டிய கட்டாய
நிலை ஏற்பட்டிருக்கிறது.
இயக்குனர் அளவில் தான் இந்த முடிவு என்பதால்
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள
கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய
முறை மூலம் பல்வேறு வேலைகள் இல்லாத
நிலை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் வரும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2
தேர்வுகள் புதிய அதிரடி திட்டங்கள்
அமல்படுத்தப்பட்டு நடக்க உள்ளதாக
கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment