பள்ளி மாணவ
மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள்
அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள்
விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனைபோன்று பள்ளிகள், கல்லூரிகள்அருகே டாஸ்மாக் மதுபான கடைகள்
திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
ஆனால், பல்வேறு அரசு பள்ளிகள் போதிய
காம்பவுண்ட் சுவர் ஏதுமின்றி திறந்த
வெளிகளாக உள்ளன. இங்கு எந்த நேரமும்
வெளியாட்கள் நடமாட்டம் உள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில் உள்ள
பொருட்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ஏற்படுவதாக கூறி பள்ளி வளாகங்களில்
வெளியாட்களை நடமாடுவதை தடை செய்ய
வேண்டும்
என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
கல்வித்துறை சார்பில்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர்
சபிதா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது பள்ளி வளாகத்தில்
புகைபிடிப்பதை தடை செய்து அரசு
உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவில்
கூறப்பட்டிருப்பதாவது:அரசு அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில்
புகையிலை பொருட்கள்
பயன்பாட்டினை தடை செய்து
உத்தரவிடப்படுகிறது. அரசு அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகளில் ‘இது புகைபிடிக்க
தடை செய்யப்பட்ட பகுதி’,
இங்கு புகைபிடித்தல் தண்டனைக்குரிய
குற்றம்‘ என்று அறிவிப்பு பலகைகள் வைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment