பொறியியல் கல்லூரி உள்ளிட்ட,
பலவகை தொழில்நுட்ப
கல்லூரிகளுக்கு, அங்கீகாரம் அளிப்பது,
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல
விவகாரங்களில், 25 ஆண்டுகளுக்கும்
மேலாக, ஏகபோக
அதிகாரத்துடன், கோலோச்சி வந்த, அகில
இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின்
(ஏ.ஐ.சி.டி.இ.,) அதிகாரங்கள் அனைத்தும்
பறிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப
கல்வி நிறுவனங்கள் தொடர்பான
பணிகள் அனைத்தையும், பல்கலைக்கழக
மானியக் குழு (யு.ஜி.சி.,) கவனிக்கும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா விவகாரங்களும்: இதையடுத்து,
வரும் கல்வி ஆண்டில், பொறியியல்
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது
, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட
அனைத்து விவகாரங்களையும்,
யு.ஜி.சி., கவனிக்க உள்ளது.
நாடு முழுவதும், 3,000 பொறியியல்
கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மேலும், ஒவ்வொரு ஆண்டும், புதிய
கல்லூரிகள் முளைத்தபடி உள்ளன.
தமிழகத்தில் மட்டும், 560 பொறியியல்
கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
நாடு முழுவதும், பொறியியல், கட்டட
வடிவமைப்பு, நகர வடிவமைப்பு,
பார்மசி உள்ளிட்ட பல தொழில்நுட்ப பாட
பிரிவுகளுக்கு, அங்கீகாரம் அளிப்பது;
இந்த கல்லூரிகளில், மாணவர்
சேர்க்கை எண்ணிக்கையை வரையறை
செய்வது உள்ளிட்ட, அனைத்துப்பணிகளையும், ஏ.ஐ.சி.டி.இ., கவனித்து வந்தது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தொழில்நுட்ப கல்லூரிகளின் கடிவாளம், ஏ.ஐ.சி.டி.இ.,யின் பிடியில்
இருந்து வந்தது. புதிய கல்லூரிக்கு, அங்கீகாரம் வாங்க டில்லிக்கு,
படை எடுக்க வேண்டும். இந்த அமைப்பிடம் இருந்து, அங்கீகாரம் பெற்ற
பின், சம்பந்தப்பட்ட பல்கலையிடம், இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும்.
பணம் கொடுத்தால்: பொறியியல் கல்லூரிகள் உட்பட, தொழில்நுட்ப
கல்லூரிகள் துவங்கும் விவகாரத்தில், பணம் கொடுத்தால், எல்லாம் நடக்கும்
என்ற நிலை உள்ளது. இதன் விளைவாக, அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகள் கூட, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் இருந்து, அங்கீகாரம் வாங்கி வந்து,
மாணவர்களை ஏமாற்றுகின்றன. இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யின்
ஒட்டுமொத்த அதிகாரத்தையும், சுப்ரீம் கோர்ட் பறித்துள்ளது. தனியார்
கல்லூரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில், கடந்த,
ஏப்ரலில், சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு அளித்துள்ளது. ஆலோசனை அமைப்பு: அதில்,
'ஏ.ஐ.சி.டி.இ., என்பது, ஆலோசனை வழங்கும் அமைப்பு தான். இது, தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு, அங்கீகாரம் அளிக்க முடியாது. தொழில்நுட்ப கல்லூரிகளை, முறைப்படுத்தும் பணியை, யு.ஜி.சி., தான் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனடிப்படையில், தொழில்நுட்ப
கல்லூரிகளை, முறைப்படுத்தும் வகையில், வரைவு விதிமுறைகளை,
யு.ஜி.சி., தன் இணையதளத்தில் ( www.ugc.ac.in ) வெளியிட்டுள்ளது. இந்த
வரைவு விதிமுறைகள், கடந்த, 3ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.
'தொழில்நுட்ப கல்லூரிகளை,
முறைப்படுத்துவது தொடர்பான
ஆலோசனைகளை, கல்வியாளர்கள், 12ம்
தேதி வரை, யு.ஜி.சி.,
இணை செயலரின் இ - மெயில்
(kpsingh.ugc@nic.in) முகவரிக்கு,
கருத்துக்களை அனுப்பலாம்' என,
தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்
அதிரடி காரணமாக, ஏ.ஐ.சி.டி.இ.,
அமைப்பின் அதிகாரங்கள் அனைத்தும்
பறிக்கப்பட்டுள்ளன. இனி, பொறியியல்
கல்லூரிகள் உட்பட, தொழில்நுட்ப
கல்லூரி விவகாரங்களை, யு.ஜி.சி.,
கவனிக்க உள்ளது. வரும் கல்வி ஆண்டில்,
பொறியியல்
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது , மாணவர் சேர்க்கை உள்ளிட்ட
விவகாரங்களை, யு.ஜி.சி., கவனிக்க உள்ளது. டில்லிக்கு வேண்டாம்:
இதுகுறித்து, 'ஏ.ஐ.சி.டி.இ., - யு.ஜி.சி., - நாக்' போன்ற அமைப்புகளில், நிபுணர்
குழு உறுப்பினராக உள்ள, பேராசிரியர், அழகுமூர்த்தி கூறியதாவது: சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், இந்த அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கல்லூரி துவங்க, இனி, டில்லிக்கு போக வேண்டிய வேலை இருக்காது. புதிய
திட்டத்தின்படி, யு.ஜி.சி.,யின் மேற்பார்வையில், புதிய கல்லூரிகளுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலையே, நேரடியாக அங்கீகாரம் வழங்கும் வகையில்,
நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், முறைப்படுத்தும் வகையிலும், புதிய
விதிமுறைகளை உருவாக்க, யு.ஜி.சி., கருத்துக்களை கேட்டுள்ளது. வரும்
கல்வி ஆண்டில் இருந்தே, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் உட்பட, தொழில்நுட்ப கல்லூரிகள் அனைத்தும், யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இவ்வாறு, அழகுமூர்த்தி கூறினார்.

ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் இருந்து, அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருப்பது, கல்லூரிகள் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீறியதால் வந்தது வினை! கடந்த, 1945ல், தொழில்நுட்ப கல்விக்கு என, ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தான், 1987ல், ஏ.ஐ.சி.டி.இ., ஆக உருவெடுத்தது. பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட தனி சட்டத்தின் அடிப்படையில், இந்த
அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, 'பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்,
கட்டட வடிவமைப்பு, நகர வடிவமைப்பு, பார்மசி, கைவினைப்பொருள், ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி ஆகிய,
ஆறு படிப்புகளுக்கு மட்டும், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கலாம்' என,
தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2000ல், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளை, ஏ.ஐ.சி.டி.இ., தன்னிச்சையாக, கூடுதலாக சேர்த்துக்கொண்டது. இதனால் எழுந்த சர்ச்சை தான், அதிகார பறிப்பிற்கு, முக்கிய காரணமாக அமைந்தது என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment