கடலூர் மாவட்டத்தில் கன மழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது. தென் கிழக்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பகலில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் கன மழை பெய்தது. வீராணம் ஏரியில் 45.60 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்: மே.மாத்தூர் 34, வேப்பூர் 22, லால்பேட்டை 21, சேத்தியாத்தோப்பு 20, காட்டுமயிலூர் 17, கீழச்செருவாய் 14.50, கொத்தாவாச்சேரி, காட்டுமன்னார்கோயில் 13, விருத்தாசலம் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இன்றும் மழை நீடிப்பதால் அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment