நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் குறைத்துள்ளது.
தமிழகத்தில், 10ம்தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் குறைத்துள்ளது.
வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்கள், விண்ணப்பத்துடன்,
குறிப்பிட்ட தொகையை கட்டணமாக,
தேர்வு துறை இயக்குனரகத்துக்கு
செலுத்த வேண்டும்.
நடப்பு ஆண்டில், லோக்சபா தேர்தல்
நடைபெற உள்ளதால், பணிகளை,
தேர்வு துறை வேகப்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில்,
மாணவர்களுக்கான
செய்முறை தேர்வு துவங்க உள்ளது.
எனவே, தற்போது, தேர்வு கட்டணத்தை,
தேர்வு துறை இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
கல்வி துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
கடந்த கல்வி ஆண்டில், 10ம்
வகுப்புக்கு, தேர்வு கட்டணமாக, 125
ரூபாய் வசூலிக்கப்பட்டது.
நடப்பாண்டில், 115 ரூபாயாக
குறைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும்
இரண்டாவது குரூப் படிக்கும், பிளஸ்2
மாணவர்கள், செய்முறை தேர்வு எழுத
உள்ள மாணவர்கள், 225 ரூபாய் செலுத்த
வேண்டும்.
செய்முறை தேர்வு இல்லாதவர்களுக்கு,
175 ரூபாய் தேர்வு கட்டணமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை,
வரும், 17ம் தேதி முதல், 23ம் தேதிக்குள்,
தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்கள்
செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
No comments:
Post a Comment