உலக கல்வி தரத்திற்கு இந்தியாவின்
கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400
கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என
கன்னியாகுமரியில் நடந்த அகில இந்திய
கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தமேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
குறித்து நாடு முழுவதிலும்
இருந்து தேர்வு செய்யப்பட்ட 43
சிறப்பு பேராசிரியர்களுக்கு சிறப்பு
கருத்தரங்கு கன்னியாகுமரியில் 2 நாட்கள்
நடந்தது.
கருத்தரங்கை துவக்கி வைத்து தேசிய
கல்வி மேம்பாட்டு கழக தலைவர் டாக்டர்
என்.ஆர்.ஷெட்டி பேசியதாவது:
உலக அளவில் தர வரிசை பட்டியலில் முதல்
200 பல்கலைக்கழகங்களில் கூட இந்தியா இடம்
பெறவில்லை. இந்த நிலையை மாற்றவும்
இந்தியா சர்வதேச அளவில் போட்டியிடத் தக்க
வகையில் கல்வி தரத்தை உயர்த்தவும்
வகை செய்யும் விதமாக உலக
வங்கி இந்தியாவுக்கு ரூ.1400
கோடியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம்
மாநில அரசுகளின் உதவியோடு அரசு,
அரசு உதவிபெறும், மற்றும் தனியார்
பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும்
பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு
வருகிறது. விரைவில் பொறியியல்
கல்லூரிகள் தங்களின்
தரத்தை மதிப்பீடு செய்து வெளியிடும்
வகையில் சட்டம் வரவுள்ளது.
இந்த நிலை ஏற்படும் பட்சத்தில்
அது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்,
சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில்
அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
எக்ஸ்ட்ரா தகவல்
இந்தியாவில் 42 மத்திய பல்கலை., 286 மாநில
அரசு பல்கலை, 129 நிகர்நிலைப் பல்கலை, 115
தனியார் பல்கலைக்கழங்கள் என மொத்தம் 572
பல்கலைக்கழகங்கள் உள்ளன.
No comments:
Post a Comment