பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க
தேர்வு துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2தேர்வு துறை முடிவு செய்துள்ளது.
வகுப்பு பொது தேர்வு மார்ச் 1ம்
தேதி துவங்கி 27ம் தேதி முடிகிறது. முன்னதாக,
அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும்
மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் மற்றும் 2ம்
வாரங்களில் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க
வேண்டும் என்று தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தி லும் இந்த
தேதி மாறுபடும்.சென்னையில் மொத்தம் உள்ள 406
மேல்நிலை பள்ளிகளில் அறிவியல்
பாடப்பிரிவில் படிக்கும் 30 ஆயிரம்
மாணவமாணவியர் செய்முறை தேர்வில்
பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்காக சென்னையில் 300 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட உள்ளன.
செய்முறை தேர்வில் 30 மதிப்பெண்கள்
புறமதிப்பீட்டுக்கும், 20 மதிப் பெண்கள் அக
மதிப்பீட் டுக்கும் தரப்பட்டுள்ளன. இரண்டிலும்
சேர்த்து 40 மதிப்பெண்கள் எடுத்தால்தான்
செய்முறை தேர்வில் மாணவ மாணவியர்
தேர்ச்சி பெற முடியும்.
அதாவது செய்முறை தேர்வில் 80% மதிப்பெண்
பெறாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது. திருவள்
ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த ஆண்டு 35
ஆயிரம் மாணவ மாணவியர் செய்முறைத் தேர்வில்
பங்கேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment