ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.
தமிழகத்தில், கடந்த ஆண்டு ஆக., 17,18
தேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலமாக, ஆசிரியர்
தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோர்
விபரம், சமீபத்தில் வெளியானது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி,
ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்ட
தலைநகரங்களில்,
முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில்
நடக்கிறது. ஜன.,20 முதல் 22 வரை முதல்
தாளில் வெற்றி பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கும், 23 முதல் 27
வரை (ஜன.,26 குடியரசு தினம் தவிர) 2ம்
தாளில் வெற்றி பெற்ற
பட்டதாரி ஆசியர்களுக்கும் சான்றிதழ்கள்
சரிபார்க்கும் பணி நடக்கிறது.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, இடம் குறித்த
தகவல்,
சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
அதன்படி, பங்கேற்பவர்கள்
அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் வர
வேண்டும். இதை சரிபார்க்க குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. சரிபார்ப்பு முடிந்து,
'சீனியாரிட்டி லிஸ்ட்' தயாரிக்கப்பட்டு,
கவுன்சிலிங் நடத்தப்படும். இவர்களுக்கான
பணி நியமன ஆணை, முதல்வர் ஜெ., கையால்,
சென்னையில், பிப்., 2 வது வாரத்தில்
வழங்கப்பட உள்ளது,” என்றார்.
No comments:
Post a Comment