Tuesday, January 14, 2014

கல்வி உதவித்தொகைக்கு 20 க்குள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள
கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட
கிறிஸ்தவ இனத்தை சார்ந்த மாணவ,

மாணவிகளுக்கான கல்வி உதவித்
தொகையை பெற இம்மாதம் 20ம்
தேதிக்குள் இணையதளம் வழியாக
விண்ணப்பிக்க வேண்டும்
என்று கலெக்டர் ஜெயஸ்ரீ
தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்
கிறிஸ்த்துவ இனத்தை சேர்ந்த
மாணவர்கள் அனைவருக்கும்
கல்வி உதவித் தொகை வங்கிக்
கணக்கில் மட்டும் வரவு வைக்கப்படும்.
ஆகையால் அனைத்து மாணவர்களும்
ஜனவரி 20ம் தேதிக்குள்
வங்கி கணக்கு துவங்கி அதன்
விவரத்தை சம்மந்தப்பட்ட
கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க
வேண்டும். மேலும்
அனைத்து கல்லூரி முதல்வர்களும்
தங்கள் கல்லூரியில் படிக்கும்
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வழங்குவதற்கு உரிய ஆன்லைன்
பதிவுகளை இம்மாதம் 20ம் தேதிக்குள்
முடித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும்,
சுயநிதி கல்லூரிகளில் படிக்கும்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்
ஆதிதிராவிட கிறிஸ்துவ
இனத்தை சேர்ந்த
மாணவர்களுக்கு கல்வி உதவித்
தொகை ஒப்பளிப்பு செய்வதற்கு
பல்கலைக் கழகத்தால்
அங்கீகரிக்கப்பட்ட கல்விக்
கட்டணத்தை இணையதளம் வழியாக
விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 20 ம்
தேதி கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment