சென்னை: கோவை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், 27 ஆதி திராவிட மாணவ, மாணவியர் விடுதிகள் கட்ட, 27 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: தமிழகத்தில்,
தற்போது ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,300
ஆதிதிராவிடர் நல விடுதிகள், 42
பழங்குடியினர் விடுதிகள் என, மொத்தம், 1,342
மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள்
இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு வாடகைக்
கட்டடங்களில் இயங்கி வரும், 54 விடுதிகள்,
அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல்,
ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், தூத்துக்குடி,
புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி,
நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில், 27
விடுதிகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.
அதில், ஐந்து கி.வா., திறன் கொண்ட, சூரிய
மின் கலன் அமைப்பு நிறுவப்படுகிறது.
இதற்காக, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு, அதில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment