பள்ளி மாணவிகளுக்கு தினமும் ரூ.2 அளிக்கும் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கநாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவுகள்
குறித்து சட்டத்துறை அமைச்சர்
ஜெயச்சந்திரா அளித்த பேட்டி: பெண்
குழந்தைகள்
கல்வி கற்பதை ஊக்குவிக்கும்
நோக்கத்தில், பள்ளிக்கு செல்லும்
ஒவ்வொரு நாளுக்கும் ரூ.2 அளிக்கும்
திட்டம் குறித்து முதல்வர்
சித்தராமையா 2013-14ம்
நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்
அறிவித்திருந்தார்.
இந்த
திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது. இம்மாதம் 1ம் தேதியில்
இருந்தே இது அமலுக்கு வருகிறது.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4.49
கோடி செலவாகும். ஒன்றாம் வகுப்பில்
பெண் குழந்தை சேர்ந்த தும், அதன்
பெயரில் வங்கி கணக்கை துவங்கி,
பள்ளிக்கு வரும் ஒவ்வொரு நாளும்
அக்குழந்தையின் கணக்கில் தலா ரூ.2
போடப்படும். 10ம் வகுப்பு முடித்ததும்
அதுவரை கணக்கில் போடப்பட்ட மொத்த
பணமும் அப்பெண்
குழந்தைக்கே அளிக்கப்படும். இதனால்
பெண்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப
பெற்றோர் ஆர்வம் காட்டுவார்கள் என
¢று எதிர்பார்க்கிறோம்.
பியுசி ஆசிரியர்கள் பிஎட்
மேற்படிப்பு படிக்க ஓராண்டு காலம்
சம்பளத்துடன் கூடிய
விடுமுறை அளிக்க அமைச்சரவையில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment