Tuesday, January 21, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட மேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி இன்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல்
வெளியிடப்பட்ட நிலையிலும்,
மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர்
தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக் கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம்
உள்ளனர்.
கடந்த வெள்ளியன்று நீதியரசர் சுப்பையா முன்
விசாரணைக்கு வந்த 5 வழக்குகளில்
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில்
ஆண்டனி கிளாரா,விஜயலட்சுமி ஆகியோருக்கு
21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால
உத்தரவு பிறப்பித்தது போன்று 5
மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள்
வழங்கிஉத்தரவிட்டிருந்தார்.இன்றும்
அதேபோன்று பலவழக்குகள் நீதியரசர்
சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,
பத்மாவதி,சக்தி,
மகேஸ்வரி,மேனகா.சத்யா,பொன்னி,உள்ளிட்ட பல
மனுதாரர்கள் தங்களுக்கும் கருணை மதிப்பெண்
வழங்கவேண்டும் என தங்கள் மனுவில்
கோரியிருந்தனர்.அதனையேற்றுக்கொண்ட
நீதிபதி அனைவருக்கும் 21 கருணை மதிப்பெண்கள்
வழங்கி உத்தரவிட்டதாக தெரிகின்றது.
மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள்
விஜயன்,இராஜேந்திரன்,ஜோதிமணி உள்ளிட்ட பலர்
ஆஜராயினர்.

No comments:

Post a Comment