ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்து விட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும்.
மாண்புமிகு தமிழகதேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும்.
முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
தலைமை நிலையச்செயலாளார்
கி.வேலுச்சாமி கோரிக்கை.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்
அனைத்து வட்டார வள மையங்களிலும்
ஆசிரியர் பயிற்றுனர்கள்
பணி புரிந்து வருகிறார்கள். இதில்
வருடந்தோறும் பணி மூப்பு அடிப்படையில் 500
ஆசிரியர் பயிற்றுனர்கள்
பள்ளிகளுக்கு பணி மாறுதல்
பெற்று வருகிறார்கள். இவர்கள் பல
இடர்பாடுகளை கடந்து வட்டார
வளமையங்களில் பணி யாற்றி வருகிறார்கள்.
கடந்த வருடத்திற்குறிய 500 ஆசிரியர்
பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி மாறுதல்
செய்யப்படும் என்று அறிவித்து ஆனால்
இதுவரை பணி மாறுதல் செய்யப்படாமல்
உள்ளனர்.
இதற்கிடையே ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களை பள்ளிகளில் உள்ள
காலிப்பணியிடங்களில் நியமனம்
செய்வதற்கான பணிகள் வேகமாக
நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.
வட்டார வளமையங்களில் 5
வருடங்களுக்கு மேல் மிகவும்
சிரமப்பட்:டு பணியாற்றி நன்கு
பயிற்சிபெற்றுள்ள ஆசிரியர்
பயிற்றுனர்களை பள்ளிகளில் உள்ள
ஆசிரியக்காலிப்பணியிடங்களில்
பணி நியமனம் செய்தால்
அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம்
அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும்
உபரியாக உள்ள ஆசிரியர்களையும்
கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கும்
பணி மாறுதல் வழங்கினால் அவர்களும்
ஒரு இடத்தில் நிலையாக பணி புரிய
வாய்ப்பு ஏற்படும்.
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும்,
உபரி ஆசிரியர்களுக்கும்
கலந்தாய்வு நடத்திவிட்டு மீதியுள்ள
காலிப்பணியிடங்களில் ஆசிரியர்
தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம்
செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு இல்லாமல் காலியாக உள்ள
ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஆசிரியர்
தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கலந்தாய்வு
முறையில் பணி நியமனம்
செய்துவிட்டு பின்னார் ஆசிரிய
பயிற்றுனர்களுக்கும்,
உபரி ஆசிரியர்களுக்கும்
கலந்தாய்வு நடத்தினால்
தற்போது பணி மூப்பு அடிப்படையில்
உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர்
அம்மா அவர்கள் இதில் தனிக்கவனம்
செலுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பணி நியமனம்
செய்வதற்கு முன்பு ஆசிரியர்
பயிற்றுனர்களுக்கும்,
உபரி ஆசிரியர்களுக்கும்
கலந்தாய்வு நடத்திட
நடவடிக்கை எடுக்குமாறு மிகவும்
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் விடுத்த அறிக்கையில்
கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment