Wednesday, January 01, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது.
 மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பி உள்ள உத்தரவு:
பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும்
மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க
ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர்
தகுதித்தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்.
தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள்
தற்போதுள்ள
பின்னடைவு காலி பணியிடங்களிலும்,
இனிமேல் ஏற்படக்கூடிய
காலி பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுவர்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும்
பார்வையற்றவர்களுக்கு மாவட்டங்களில் உள்ள
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம்
மூலம் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக்
கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்
என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை குறித்த
கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆசிரியர்
தகுதி தேர்விற்கான
சிறப்பு பயிற்சிக்கு திட்டமிட
உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும்
நகரின் மையப்பகுதியில் அனைவரும் எளிதில்
அணுகும் வண்ணம் மையத்தை தேர்ந்தெடுத்தல்
வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில்
குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் பார்வையற்றோர்
பயன்படுத்த ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 50
நபர்களை கொண்டு பயிற்சி நடத்துவதற்குரிய
இரண்டு அறைகள்
இருக்குமாறு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஈரோடு, விழுப்புரம், வேலு£ர், கோயம்புத்து£ர்,
சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற பெரிய
மாவட்டங்களில் மூன்று அறைகள் இருக்க
வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தின்
பெயரை அனைத்து நிறுவன முதல்வர்களும் ஜன. 6ம்
தேதிக்குள் தெரிவிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில் 40 நாட்கள்
பயிற்சி அளிக்கப்படவேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்
உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுநகர்
எஸ்எஸ் சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளியில்
அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment