ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 30 மையங்களில் ஜனவரி 28-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்டில்
நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில்
வெற்றி பெற்ற 29 ஆயிரத்து 528 பேர் இதில்
பங்கேற்கின்றனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்காக
ஒவ்வொரு மையத்திலும் ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள்
பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல் நாளான
திங்கள்கிழமை எந்தவிதப் பிரச்னையும்
இன்றி சான்றிதழ் சரிபார்ப்பு சுமூகமாக
நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில்
2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13
ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment